TNPSC GENERAL TAMIL IMPORTANT QUESTIONS-02

0
570

பொதுத் தமிழ்
வினாக்கள்-01

1.பொருத்துக.
அ. விடுதலை கவி 1 அப்துல் ரகுமான்
ஆ. திவ்ய கவி 2 வாணிதாசன்
இ. கவிஞரேறு 3 பாரதியார்
ஈ. கவிக்கோ 4 பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்

2.பொருத்துக.
அ. பூங்கொடி 1 கண்ணதாசன்
ஆ. கொடி முல்லை 2 சுரதா
இ. ஆட்டனத்தி ஆதிமந்தி 3 முடியரசன்
ஈ. பட்டத்தரசி 4 வாணிதாசன்

3.வடமொழியில் முகுந்த மாலை என்னும் நூலை இயற்றியவர்?

4.”பஃறுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள” என்ற வரிகள் இடம் பெறும் நூல்?

5.திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்துத் தஞ்சையில் வெளியிட்டவர்?

6.வெற்பு,சிலம்பு, பொருப்பு~ ஆகிய சொற்கள் குறிக்கும் பொருள்
7.”நெடிலோ டுயிர்த் தொடர்க்குற் றுகரங்களுள்
பறவொற் றிரட்டும் வேற்றுமை மிகவே ~ இவ்விதிக்குச் சான்றை தேர்க.
அ. இரட்டுற மொழிதல்
ஆ. வட்ட பலகை
இ. கட்டுச்சோறு
ஈ. காட்டுக்கோழி
8.”முந்நீர் வழக்கம் மகடூஉ வோடில்லை ~ இதில் மகடூஉ என்பது _?

9.தொடை ;8 , தொடை விகற்பங்கள் : _?

10.தொகை நிலைத் தொடர் _ தொகாநிலைத் தொடர் __

11.ஐ, ஔ,ஆகிய இரண்டு எழுத்துகளும்_ எனவும் அழைக்கப்படுகிறது.

12.முற்றியலுகர சொல் கண்டறிக.
அ. மாடு
ஆ. மூக்கு
இ. கதவு
ஈ. மார்பு
13.ஒரு பொருட் பன்மொழி காண்க.
அ. மீமிசை ஞாயிறு
ஆ. உயர்ந்த கட்டடம்
இ. மேல் பகுதி
ஈ. மையப் பகுதி

14.பெறு ~ விணையாலணையும் பெயராக மாற்றுக.

15.பொருத்துக.
அ. இலக்கணமுடையது 1 புறநகர்
ஆ. மங்கலம் 2 கால் கழுவி வந்தான்
இ. இலக்கணப் பொலி 3 இறைவனடி சேர்ந்தார்
ஈ. இடக்கரடக்கல் 4 நிலம்


பொதுத் தமிழ் விடைகள்

1.3,42,1
2.3,4,1,2
3.குலசேகர ஆழ்வார்
(முதுமொழி மாலை~உமறுப்புலவர்)
4.சிலப்பதிகாரம்

5.மலையத்துவசன் மகன் ஞானப்பிரகாசம்

6.மலை

7.காட்டுக்கோழி

8.பெண்(ஆடூஉ~ ஆண்)

9.5
10.6,9

11.சந்தியக்கரம்
12.இ

13.அ

14.பெறுபவன்

15.4,3,1,2