ஜூலை 1 முதல் ஆதாருடன் பான் கார்டை இணைக்க் ரூபாய் 1000 அபதாரம்! | Check your linking Status

0
443

பான் எனும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை ஆதார் எண்ணுடன் இன்று வரை இணைக்கவில்லை என்றால் நாளை முதல் தாமதக் கட்டணமாக ரூ. 1,000 செலுத்த வேண்டியதாக இருக்கும்.

புதிதாகச் செருகப்பட்ட வருமான வரிச் சட்டத்தின் 234H பிரிவு கீழ் மார்ச் 31, 2022க்குள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதன் அடிப்படையில், மத்திய அரசு 2020 ஆண்டு பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் அனைவரும் இணைக்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்திருந்தது. அதன்படி கடந்த மார்ச் 31ஆம் தேதி அதற்கு கடைசி நாளாக இருந்தது. எனினும் நாட்டில் அப்போது நிலவிய கொரோனா சூழல் காரணமாக இந்த காலக்கெடு வரும் 2023 மார் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி வரும் ஜூலை 1 ஆம் தேதி முதல் பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைத்தால் அதற்கு அபராதம் 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும். தற்போது ஏப்ரல் 1 முதல் ஜூன் 30ஆம் தேதி வரை பான் மற்றும் ஆதார் கார்டு இணைப்பவர்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அந்தத் தொகை ஜூலை 1 முதல் இரட்டிப்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகவே இன்றே பான் மற்றும் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டுவது மிகவும் அவசியமான ஒன்றாக அமைந்துள்ளது.

எப்படி பான்-ஆதார் கார்டுகளை இணைக்க முடியும்?

முதலில் வருமானவரி செலுத்தும் இணையதளத்திற்கு https://incometaxindiaefiling.gov.in/ செல்ல வேண்டும்.அங்கு சென்று உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்பதை link aadhaar status என்ற தெரிவு மூலமாக முதலில் உறுதி செய்க. அல்லது கீழே இருக்கும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை கொடுத்து பின்பு கீழே view link aadhaar status என்னும் பட்டணை கிளிக்செய்யும் போது இணைந்துள்ளதா அல்லது இணையவில்லையா என்பது தெரிந்துவிடும்.

ஒருவேளை இணையவில்லை எனில் 500 ரூபாய் செலுத்தி எப்படி நம் ஆதாருடன் பான் கார்டை இணைப்பது என்பதை கீழே இருக்கும் வீடியோவில் தெளிவாக கற்று கொள்ளுங்கள்.