1. உலகின் கூரை, மூன்றாம் துருவம் என்று அழைக்கப்படுவது…….
2. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு…..
3. அட்சக்கோடுகள் இன் மொத்த எண்ணிக்கை…….
4. புனித யாத்ரீகர்களின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர்……
5. முதலாம் மகேந்திரவர்மன் சூடிக்கொண்ட பட்டங்கள் யாவை?
6. தேசிய கீதம் முதன் முதலாக எப்போது பாடப்பட்டது?
7. 'எதிரிகளை அழிப்பவன்' என்ற பொருள் கொண்ட அமிர்தகா என்று யாரை அழைத்தனர்?
8. 'வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று; அவனது தேவைக்கு மட்டுமே' என்று கூறியவர்…
9. கைலாசநாதர் கோயிலை கட்டியவர்…..
10. உலகின் மிக தொன்மையான நாகரிகம்…..
11. கூற்று: தொடக்க கால மனிதர்கள் வேட்டையாட துப்பாக்கியை பயன்படுத்தினார். காரணம் : ஒரு குச்சி அல்லது கல்லால் பெரிய விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தது.
12. இந்திய தொல்லியல் துறையின் தலைமையகம் அமைந்துள்ள இடம்…….
13. கூட்ட அரங்கு அமைந்துள்ள இடம்…..
14. மனிதர்களால் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்…….
15. கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது? 1. மனிதர்களால் உபயோகப்படுத்தப்பட்ட முதல் உலோகம் செம்பு. 2. சிந்துவெளி மக்கள் வண்டிகளை இழுக்க குதிரைகளை பயன்படுத்தினார்கள். 3. மொகஞ்சதாரோ ஹரப்பாவை விட பழமையானது. 4. ஹரப்பா நாகரிகம் ஒரு கிராம நாகரீகம்.
16. இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்ட ஆண்டு……
17. கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க: 1. சிந்துவெளி தெருக்கள் சட்டக வடிவமைப்பை கொண்டிருந்தன. 2. அங்கு அரண்மனைகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை. 3. அங்கு வழிபாட்டுத்தலங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மேலே கூறப்பட்ட கூற்றுகளில் எது / எவை சரியானவை?
18. சரியான கூற்றை கண்டறிக: 1. சூரியக் குடும்பத்தின் மூன்றாவது கோள் பூமி. 2. சூரியன் ஹைட்ரஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்களால் ஆனது. 3. புதன் கோளுக்கு துணைக்கோள்கள் எதுவும் இல்லை.
19. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக: கூற்று 1: சூரிய குடும்பத்தில் வேகமாக சுழலும் கோள் வியாழன். கூற்று 2: நெப்டியூன் மிகக் குளிர்ந்த கோள் ஆகும்.
20. பின்வருவனவற்றுள் எது இரண்டாம் நிலை நிலத்தோற்றம் அல்ல.
21. சர்வதேச மலைகள் தினம்……
22. பசிபிக் பெருங்கடலையும் ஆர்டிக் பெருங்கடலையும் இணைப்பது…….
23. பஞ்சாப் மாநிலத்தின் நாட்டுப்புற நடனம்……
24. இனவெறிக் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு…….
25. நமது அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவர்…….
26. 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் மிகக் குறைந்த கல்வியறிவு பெற்றுள்ள மாவட்டம்…..
27. சப்த சிந்து என்பது ……. ஆறுகள் ஓடும் நிலப்பகுதி.
28. கீழ்குயில்குடி கிராமத்தில் உள்ள சமணர் மலை ……… நகரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
29. கூற்று: கிமு ஆறாம் நூற்றாண்டு இந்தியாவின் அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் ஒரு முக்கியமான காலகட்டமாகும். காரணம்: சமயத்தின் பெயரால் செயப்படுத்தப்பட்ட சுரண்டல் நடைமுறைகள் புதிய நம்பிக்கைகள் தோன்றுவதற்கு வழி அமைத்துக் கொடுத்தன.
30. சரியான விடையை கண்டறிக: வர்த்தமானர்.. 1. ஒரு சத்திரிய இளவரசர். 2. 12 1/2 ஆண்டு காலம் தவத்தில் இருந்தவர். 3. இவர்தான் உண்மையிலேயே சமயத்தை உருவாக்கியவர். 4. முதல் தீர்த்தங்கரர் ஆவார்.
31. தலைநகரான பாடலிபுத்திரம் நகருக்கு ….. நுழைவுவாயில்கள் இருந்தன.
32. கலிங்கப் போரின் பயங்கரம் …… வது பாறைக் கல்வெட்டில் விவரிக்கப்பட்டுள்ளது.
33. கூற்று: மகதத்தின் படிப்படியான அரசியல் மேலாதிக்க வளர்ச்சி பிம்பிசாரர் காலத்தில் தொடங்கியது. காரணம்: பிம்பிசாரர் படையெடுப்பு மற்றும் திருமண உறவு ஆகியவற்றின் மூலம் அரசை விரிவுபடுத்தினார்.
34. சரியான கூற்று எவை? 1. நகரத்தை நிர்வாகம் செய்வதற்காக 40 உறுப்பினர்களைக் கொண்ட குழுவானது ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு இருந்தது. 2. நகர நிர்வாகம் நகரிகா அதிகாரியின் கீழ் இருந்தது.
35. முகலாயர்கள் காலத்தில் ராஜாவுக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வகை மாம்பழங்கள் …….. என அழைக்கப்பட்டது.
36. ……. நாடுகளின் அரசமைப்புச் சட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கினர்.
37. 'நகரங்களின் நிழல்' கிராமம் எனப்படும்.
38. சரியான விடையை எழுதுக. கூற்று: களப்பிரர் காலம் இருண்ட காலமல்ல. காரணம்: இலக்கிய சான்றுகள், புதிய எழுத்து முறை, வணிகம், வர்த்தகம் செழிப்பு பற்றி தெரிகிறது.
39. கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை அல்ல? 1. பாண்டியர் அத்திப்பூ மாலை சூடினார் 2. குறிஞ்சி மக்களின் வழிபாட்டு தெய்வம் இந்திரன் 3. இயற்கை வரலாறு நூலின் ஆசிரியர் இளைய பிளினி.
40. உலகப் புகழ்பெற்ற புத்தரின் ஆளுயர சிற்பங்கள் …. பள்ளத்தாக்கில் இருந்தன.
41. கூற்று: 1. மகாயான பௌத்தர்கள் குகைகளைக் குடைந்து எடுக்கும் முறையை கிரேக்கர்கள் இடமிருந்து கற்றனர். கூற்று: 2 கிரேக்கர்கள் குகைகளை அமைப்பதில் சிறந்தவர்கள்.
42. நின்ற கோலத்தில் ஆன புத்தரின் வெண்கலச்சிலை கண்டறியப்பட்ட இடம்……
43. கூற்று1: குப்தர்கள் காலத்தைக் காட்டிலும் ஹர்ஷர் காலத்தில் குற்றவியல் சட்டங்கள் கடுமையாக இல்லை. கூற்று 2 : சட்டங்களை மீறுவோருக்கு அரசருக்கும் எதிராக சதி செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
44. ஹர்ஷர் கலந்து கொண்ட கும்பமேளா விழா நடைபெற்ற இடம்…
45. கூற்று 1: அப்பரும் மாணிக்கவாசகரும் வைணவ அடியார்கள். கூற்று 2 : நம்மாழ்வாரும் ஆண்டாளும் சிவனடியார்கள்.
46. ஆசியா மொத்த பரப்பில் வேளாண்மைக்கு ஏற்ற நிலப்பரப்பு……
47. பழைமையான அரசியலமைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ளது?
48. இந்தியாவின் அரசியல் அமைப்பின் அடித்தளமாக பஞ்சாயத்து ராஜ் பரிந்துரைத்தவர்……..
49. சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்ட ஆண்டு…….
50. 1884 ஆம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கு நடத்தப்பட்ட நாடு…