மீண்டும் ஊரடங்கு உறுதி செய்தது தமிழக அரசு!

1
1058
corona lockdown

05-01-2022, ஒமிக்ரான் பரவலை தொடர்ந்து மீண்டும் ஊரடங்கு போடப்படலாம் என பரவலாக பேசப்பட்டு வந்தது இந்நிலையில் தமிழக அரசால் மீண்டும் ஊரடங்கு உறுதி செய்யப்படுள்ளது.

தமிழகத்தில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவலை தடுக்க, நாளை முதல் (06-01-2022) இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகின்றது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள் விவரம்
(ஜனவரி 9) ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில்கள் இயங்காது.

உணவகங்களில் பார்சல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் வழிபாட்டுத் தளங்களில் மக்களுக்கு தடை.

இரவு 10 மணி முதல் காலை 05 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. இது நாளை (06-01-2022) முதல் அமலுக்கு வருகிறது.

திரையரங்குகளில் ஏற்கனவே அறிவித்தபடி 50 சதவிகித பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி.

தடுப்பூசி முகாம்கள் ஞாயிற்றுக் கிழமைகளுக்கு பதிலாக சனிக்கிழமைகளில் நடைபெறும்.

1 முதல் 9 வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை.

தனியார் பயிற்சி மையங்கள் செயல்பட தடை.

உணவகங்கள், துணிக்கடைகள், விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி.

இது போன்ற பல கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. முழுமையான தகவலுக்கு கீழே இருக்கும் pdf-ஐ Click செய்து download செய்யவும்.