வாட்ஸ்‌ அப்‌ மூலம்‌ கொரோனா தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டதற்கான சான்றிதழைப்‌ பெறுவது எப்படி?

0
4564

வாட்ஸ்‌ அப்‌ மூலம்‌ கொரோனா தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டதற்கான சான்றிதழைப்‌ பெறுவது எப்படி?

நம்முடைய மொபைலில்‌ 90131 51515 என்ற எண்ணைச்‌ சேமித்து வைத்துக்‌ கொள்ள வேண்டும்‌. பின்னர்‌ வாட்ஸ்‌ அப்பில்‌ மேலே குறிப்பிட்டிருக்கும்‌ எண்ணுக்கு ‘Hi’ எனக்‌ குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்‌. அதற்கு மறுமொழியாக கொரோனா தொடர்பான என்ன தகவல்‌ வேண்டும்‌ எனக்‌ கேட்டு ஒரு பட்டியலை அளிக்கும்‌. அந்தப்‌ பட்டியலில்‌ இரண்டாவது ஆப்ஷனாக இருக்கும்‌ Book Appointment Download Certificate என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்‌.

இங்கு நாம்‌ விரும்பிய ஆப்ஷனைத்‌
தேர்ந்தெடுப்பதற்கு, அந்த பட்டியல்‌ எந்த
இடத்தில்‌ இருக்கிறதோ அந்த எண்ணை நாம்‌ குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்‌. அடுத்து வரும்‌ மறுமொழியில்‌ மீண்டும்‌ Covid Vaccine Certificate என்ற ஆப்ஷனைத்‌ தேர்ந்தெடுக்க வேண்டும்‌.

அதன்‌ பின்னர்‌ நம்முடைய எண்ணுக்கு ஒரு OTP வரும்‌. அந்த OTP-யை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும்‌.

அதன்‌ பின்னர்‌ யாருடைய தடுப்பூசிச்‌ சான்றிதழ்‌ வேண்டும்‌ எனக்‌ கேட்கும்‌. அதில்‌ நம்முடைய விருப்பத்தைக்‌ கொடுத்தால்‌, நம்முடைய தடுப்பூசிச்‌ சான்றிதழ்‌ வாட்ஸ்‌அப்பிலேயே
நமக்கு அனுப்பப்படும்‌.

நாம்‌ தடுப்பூசி செலுத்தும்‌ போது எந்த
எண்ணைக்‌ கொடுத்திருந்தோமோ அதே
எண்ணைக்‌ கொண்ட வாட்ஸ்‌அப்‌ கணக்கில்‌ இருந்து மேற்கூறிய செயல்முறையைச்‌ செய்தால்‌ மட்டுமே நம்மால்‌ சான்றிதழைப்‌ பெற
முடியும்‌.