TRB பாலிடெக்னிக் தேர்வுகள் இரண்டு வாரங்கள் ஒத்திவைப்பு!!

0
445

TN TRB பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ஒத்திவைப்பு – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
தமிழகத்தில் அக்டோபர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வானது விண்ணப்பதாரர்களின் கோரிக்கையை ஏற்று 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்.

விரிவுரையாளர் தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு பாலிடெக்னிக் விரிவுரையாளா் பணிக்கான தோ்வு நடைபெற்றது. இதில் 1,058 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டு வந்த நிலையில் மறுதேர்வானது வரும் அக். 28 ஆம் தேதி முதல் அக்.31 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 40 ஆயிரம் போ் தேர்வெழுத விண்ணப்பித்துள்ள நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தேர்வு மையங்களின் பட்டியல் வெளியானது.

பலருக்கும் தங்கள் சொந்த மாவட்டத்தில் தேர்வு மையம் கொடுக்கப்படாமல் பல நூறு மைல் தொலைவில் வேறு மாவட்டங்களில் தேர்வு எழுத பட்டியல் வெளியான நிலையில் பலரும் இதை எதிர்த்து ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.

தற்போது அனைவருக்கும் தங்கள் மாவட்டங்களிலேயே தேர்வு எழுத வகை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.