தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு-கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு

0
490

தமிழக பள்ளிக்கல்வித் தறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது

இந்தியாவில் கொரோனா நோய்தொற்று குறைந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் .இதுகுறித்த அறிவிப்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவிப்பார் என்றும் தெரிவித்துள்ளார் .மேலும் தமிழகத்தில் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாணவர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் என்ற அடிப்படையில் மாணவர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.