வரலாறு போற்றும் இந்திய பெண்மணிகள் -TNPSC NOTES

0
437

வரலாறு போற்றும் இந்திய பெண்மணிகள் 

கிட்டுர் சென்னம்மா (23 அக்டோபர் 1778 – 21 பிப்ரவரி 1829)

கர்நாடகா மாநிலம் பெல்காம் பகுதியில் உள்ள கிட்டுர் எனும் ஊரின் ராணியாக வாழ்ந்து வந்தவர் கிட்டுர் சென்னம்மா. சிறுவயதிலேயே குதிரையேற்றம், வாள் பயிற்சி, வில் வித்தை போன்ற பயிற்சிகளை பெற்றவர் இவர். கிட்டுர் சென்னம்மா சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ஆங்கிலேயர்களின் ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்கு எதிராக தொடர்ந்து சண்டையிட்டு வந்த இவர், ஆங்கிலேயர்களால் சிறை பிடிக்கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே இறந்த இவரை கர்நாடகா மாநிலத்தின் வீர மங்கையாக மக்கள் போற்றுகின்றனர்.

ராணி லக்ஷ்மிபாய் (19 நவம்பர் 1828 – 17 ஜூன் 1858)

வட இந்தியாவில் உள்ள ஜான்சி எனும் மாநிலத்தின் அரசியான ராணி லக்ஷ்மிபாய் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தொடர்ந்து கிளர்ச்சியில் ஈடுபட்டவர். இவர் வில்வித்தை, குதிரையேற்றம், தற்காப்பு ஆகியவற்றில் நன்கு பயிற்சி பெற்றவர். இந்திய சுதந்திரத்தில் லக்ஷ்மிபாயின் பங்கு அளப்பறியது. மாவீரரான ராணி லக்ஷ்மிபாயின் பெயரில் தான் பெண்களுக்கான தனிப்படை உருவாக்கப்பட்டது. 1800ஆம் ஆண்டுகளின் மத்தியில் ராணி லக்ஷ்மிபாய் தனக்கு சொந்தமாக தனியே ஒரு படை திரட்டி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டு வந்தார். நாட்டுக்காக தன் 30வது வயதில் உயிர் தியாகம் செய்ததால் இவர் தேசத்தின் நாயகி என வர்ணிக்கப்படுகிறார்.

சாவித்ரிபாய் பூலே (3 ஜனவரி 1831 – 10 மார்ச் 1897)

மகாராஷ்டிரா மாநிலம் நய்கவுன் பகுதியில் பிறந்த சாவித்ரிபாய் பூலே தன்னுடைய 9வது வயதில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவர் ஜோதிராவ் பூலேவுடன் புனேவுக்கு இடம் பெயர்ந்தார். புனேவுக்கு செல்லும் போது கிறிஸ்தவ அமைப்பினர் கொடுத்த புத்தகங்களை தன்னுடன் எடுத்துச்சென்றார். தன்னுடைய கணவரின் உதவியால் எழுத, படிக்க கற்றுக்கொண்ட சாவித்ரிபாய் இந்தியா முழுவதும் கல்வியை கொண்டு சென்றார். அஹமத்நகரில் உள்ள ஃபரார்ஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் புனேவில் உள்ள மிட்செல் பள்ளியில் பயிற்சி பெற்ற இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் எனும் பெருமையை பெற்றார். 1848ஆம் ஆண்டு சாவித்ரி பாய் பூலே பெண்களுக்கான பிரத்யேக பள்ளிக்கூடத்தை தொடங்கினார்.

ஆனந்திபாய் ஜோஷி (31 மார்ச் 1865 – 26 பிப்ரவரி 1887)

மேற்கத்திய மருத்துவமுறையில் பயிற்சி பெற்ற முதல் தெற்கு ஆசிய பெண் மற்றும் முதல் இந்திய பெண் என்ற பெருமைக்கு உரியவர் ஆனந்திபாய் ஜோஷி. அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் இந்தியப்பெண் என்ற பெருமைக்கு உரியவர் இவர். 17ஆம் நூற்றாண்டின் போது ஆண் மருத்துவர்கள் பிரசவம் பார்ப்பதை பெண்கள் மிகவும் அசௌகர்யமாக உணர்ந்தனர். மருத்துவம் படிக்க விண்ணப்பித்த ஜோஷி தனது விண்ணப்ப படிவத்தில் இந்தியாவில் உள்ள ஏழை பெண்களுக்கு மருத்துவம் பார்க்க விரும்புவதாகவும், பெண்களின்அசௌகர்யத்தையும் குறிப்பிட்டிருந்தார். தன்னுடைய 22 வயதில் ஆனந்திபாய் ஜோஷி இறந்துவிட்டாலும், பெண் சமூகத்தின் மீது பாய்ந்த நம்பிக்கை ஒளி அவர் என்று இன்றும் புகழ்கின்றனர்

சரோஜினி நாயுடு (13 பிப்ரவரி 1879 – 2 மார்ச் 1949)

கவிஞராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்ந்த சரோஜினி நாயுடு, ஒருங்கிணைந்த மாகாணங்களானஆக்ரா மற்றும் ஓத்தின் முதல் கவர்னராக இரண்டு ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார். மேலும் இந்திய மாநிலத்தின் முதல் பெண் கவர்னரும் இவர் தான். இந்திய தேசிய காங்கிரஸின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. சத்தியகிரக போராட்டத்தில் பங்கேற்ற ஒரே பெண் சரோஜினி நாயுடு. மகாத்மா காந்தி மற்றும் மதன் மோகன் மாலவியா உடன் வட்ட மேசை மாநாட்டில் பங்கு பெற்றவர் என்ற பெருமைக்கு உரியவர். இவர் இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படுகிறார்.

விஜய லட்சுமி பண்டிட் (18 ஆகஸ்ட் 1900 – 1 டிசம்பர் 1990)

இந்தியாவில் கேபினட் பதவி வகித்த முதல் பெண் விஜய லட்சுமி பண்டிட் ஆவார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இரண்டு முறை இவர் பதவி வகித்துள்ளார். ரஷ்ய அரசின் இந்திய தூதராக நாற்பதுகளில் பணியாற்றிய இவர், அதன் பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தின் கவர்னராக பதவி வகித்தார். மேலும் ஐநா பொது அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமைக்கும் உரியவர் விஜய லட்சுமி பண்டிட்!

கமலா தேவி சட்டோபாத்யாய் (3 ஏப்ரல் 1903 – 29 அக்டோபர் 1988)

லண்டனில் கல்வி பயின்ற கமலா தேவி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தினால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தார். சுதந்திர இந்தியாவில் பெண்களுக்கான நலனில் அக்கறை கொண்டு பணியாற்ற தொடங்கினார். இந்தியாவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் கமலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது. கலை மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய பாரம்பரிய கைத்தறி துறையை பாதுகாப்பதிலும், அதனை புதுப்பிப்பதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டார். 1955ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும், 1987ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதையும் கமலா தேவி சட்டோபாத்யாய் பெற்று இருக்கிறார்.

நீதிபதி அன்னா சாண்டி (4 மே 1905 – 20 ஜூலை 1996)

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த அன்னா தனது மாநிலத்தில் சட்டத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார். வழக்குரைஞராக அன்னா பணியாற்றிய காலத்தில் பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து வாதாடி வந்தார். 1931ஆம் ஆண்டு ஸ்ரீ முலம் பாப்புலர் அசெம்ளிக்கு நடத்திய தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் பெண் போட்டியிடுகிறார் என்ற வெறுப்பின் காரணமாக, பத்திரிகைகளின் எதிர்ப்பால் 1932ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சில வருடங்களுக்கு பிறகு “முன்சீஃப்” எனப்படும் இந்தியாவின் முதல் பெண் நீதிபதியாக பதவியேற்றார். 1948ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக பெறுப்பேற்றார். 1959ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி கேரள உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக அன்னை பதவியேற்றார். அங்கு 9 வருட காலம் அவர் நீதிபதியாக பணியாற்றினார்.

சுசேத்தா கிரிப்லானி (25 ஜூன் 1908 – 1 டிசம்பர் 1947)

இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட கிரிப்லானி, இந்திய பிரிவினையின் போது மகாத்மா காந்தியுடன் இணைந்து பணியாற்றியவர். அரசியல் நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிப்லானி, இந்திய அரசியலமைப்பு வரையறுத்த துணைக்குழுவிலும் அங்கம் வகித்தார். இவர் இந்தியாவின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவர். அகில இந்திய மகிளா காங்கிரஸை நிறுவியர் சுசேத்தா கிரிப்லானி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை PDF வடிவில் டவுன்லோட் செய்து கொள்ள கீழே உள்ள CLICK HERE பட்டனை அழுத்தவும்.

CLICK HERE