இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள்

0
1240

இந்திய அரசியலமைப்பு பற்றிய முக்கிய குறிப்புகள்

➡️இந்தியா இறையாண்மையுள்ள (Sovereign), சமதர்ம (Socialist), சமயச்சார்பற்ற (Secular), மக்களாட்சிக் (Democratic) குடியரசு (Republic).


➡️இறையாண்மை என்பது இந்தியாவின் உள்நாட்டு, வெளிநாட்டு விஷயங்களில் பிற நாடுகள் தலையிடாவண்ணம் இந்தியா பெற்றுள்ள சுதந்திரமான ஆற்றலைக் குறிக்கும்.


➡️ஏழை, பணக்காரர் வேறுபாடின்றி கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் அனைவரும் சமவாய்ப்பு பெறுவதே சமதர்மம்.

➡️அரசு எந்த மதத்தையும் சார்ந்ததல்ல என்பதே சமயச்சார்பின்மை.


➡️உலகின் மிகப் பெரிய எழுதப்பட்ட அரசியலமைப்பான இந்திய அரசியலமைப்பு 395 உறுப்புகளைக் (Articles ) கொண்டது.

➡️முகவுரை (Preamble), 22 பகுதிகள் (Parts), 12 அட்டவணைகள் (Schedules) கொண்டது.


➡️மாறிவரும் காலத்திற்கேற்ப இந்திய அரசியலமைப்பு 98 முறைகள் (2013 வரை) திருத்தப்பட்டுள்ளது.


➡️இந்திய அரசியலமைப்பு வரலாறுஇந்தியர்களுக்கு அரசியலமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928-ல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது.


➡️இந்தியாவுக்கென தனி அரசியல் அமைப்புச் சட்டம் என்ற கருத்தை முன்வைத்தவர் எம்.என்.ராய்.

➡️நேரு அறிக்கை (1928) மோதிலால் நேருவால் தயாரிக்கப்பட்டது.


➡️நேரு அறிக்கையில் இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து கோரப்பட்டது.

➡️டொமினியன் அந்தஸ்து என்பது பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுயாட்சி.


➡️ஜவஹர்லால் நேரு, நேதாஜி போன்றோர் முழு விடுதலை கோரலாம் என்றார்கள்.

➡️முழு விடுதலைத் தீர்மானத்தை, 1929-ல் கொண்டு வரலாம் என்றார் காந்திஜி.


➡️அமைச்சரவை தூதுக்குழு (1946) அறிவுரைப்படி இந்திய அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டது.

➡️அமைச்சரவை தூதுக்குழுவின் தலைவராக இருந்தவர் சர் பெத்திக் லாரன்ஸ்.


➡️அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

➡️டாக்டர் அம்பேத்கர் மகாராஷ்ட்ராவிலிருந்து அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கபட்டார்.

➡️அரசியல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராக இருந்தவர் சச்சிதானந்த சின்ஹா.


➡️அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் டிசம்பர் 9, 1946-ல் நடைபெற்றது.


➡️அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் .


➡️அரசியலமைப்புக்கான குறிக்கோள் தீர்மானம் ஜனவரி 22, 1947-ல் நேருவால் முன்மொழியப் பட்டது.


➡️அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர்.


➡️அரசியலமைப்புச் சட்டம் 1948 பிப்ரவரியில் தயாரானது.


➡️அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள் நவம்பர் 26, 1949.


➡️அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளே இந்திய சட்ட தினம்.

➡️அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாள் ஜனவரி 26, 1950.


➡️அரசியலமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட நாளே இந்திய குடியரசு தினம்.


➡️அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் 299 பேர்.
➡️2 ஆண்டுகள் 11 மாதம் 18 நாட்கள் அரசியல் அமைப்பு சபை கூடி விவாதித்து அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியது.


➡️இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தவர் அம்பேத்கர் என்பது அனைவரும் அறிந்ததே. அரசியலமைப்புச் சட்டத்தை தன் கைப்பட முழுவதுமாக எழுதியவர் பிரேம் பெஹாரி நரேன் சக்ஸேனா. அரமைப்பு சட்டத்தை எழுதி முடிக்க ஆறு மாத காலம் ஆனது.


➡️அரசியலமைப்புச் சட்ட கையெழுத்துப் பிரதிகள் புகைப்படமாக்கப்பட்டு டேராடூனில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வைக்கப்பட்டுள்ளது.


➡️1950 ஜனவரி 26-ஆம் நாள் இந்திய குடியரசு மலர்ந்தபோது அரசியல் அமைப்பு சபை நாடாளுமன்றமாக மாறியது, அதன் தலைவர் இந்திய குடியரசுத்தலைவரானர் 50 ஆண்டுகளுக்குப் பின் எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்ட செயல்பாடு பற்றி அறிய குழு அமைக்கப்பட்டது.