பொது அறிவு கேள்வி பதில்கள்-03

0
260

பொது அறிவு கேள்வி பதில்கள்-03

  1. ஐ.நாவின் கொடியை விண்வெளியில் பறக்கவிட்ட ஆண்டு எது? – நவம்பர் 1995
  2. ஐ.நா.வின் நிரந்தர அவை? – பொதுச் சபை
  3. ஐரோப்பிய கூட்டமைப்பின் பொருளாதாரக் கொள்கையை கவனித்து வருவது எது? – மத்திய வங்கி
  4. அயோத்தி நவாபின் மனைவி? – பேகம் ஹஸ்ரத் மகால்
  5. கான்பூர் எப்பொழுது ஆங்கிலேயர் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது? – நவம்பர் 1857
  6. குத்தகை நிலங்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர் யார்? – பெண்டிங் பிரபு
  7. பொது இராணுவப் பணியாளர் சட்டத்தைக் கொண்டு வந்தவர் யார்? – கானிங் பிரபு
  8. நடத்தல், ஓடுதல் போன்ற இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் உறுப்பு? – சிறுமூளை
  9. 1989 முதல் யாருடைய நினைவாக தமிழக அரசு ஏழைப் பெண்களுக்கான திருமண உதவி திட்டத்தினை வழங்கி வருகிறது? – மூவலூர் இராமமிர்தம்மாள்
  10. தாசிகளின் மோச வலை (அ) மதி பெற்ற மைனர் என்ற சுயசரிதை எழுதியவர் யார்? – மூவலூர் இராமமிர்தம்
  11. தென்னாட்டைத் தன்னந்தனியே ஆண்ட பெண்ணரசி யார்? – இராணி மங்கம்மாள்
  12. காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்றழைக்கப்படுபவர் யார்? – அம்புஜத்தம்மாள்
  13. தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் எந்த நகரத்தில் பிறந்தார்? – ஜோகன்னஸ்பர்க்
  14. தமிழகத்தின் அன்னிபெசண்ட் …………….. – மூவலூர் இராமமிர்தம்மாள்
  15. மூவலூர் இராமமிர்தம் அம்மையார் தனது முதல் போராட்டத்தை எங்கு தொடங்கினார்? – மயிலாடுதுறை
  16. 1913ஆம் ஆண்டு எங்கு நடைபெற்ற அறப்போராட்டத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்? – வால்க்ரஸ்ட்
  17. கார்ப்பரேஷன் வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது? – மங்களூர் (கர்நாடகம்)
  18. செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் எந்த வாயு உள்ளது என்று நாசா விஞ்ஞானிகள் உறுதிபடுத்தினர்? – ஆக்சிஜன்