தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கலைப்பு? OPS எதிர்ப்பு!

0
197

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கலைப்பு? OPS எதிர்ப்பு!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கலைப்பு? OPS எதிர்ப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கலைப்பு? OPS எதிர்ப்பு!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) கலைப்பு? OPS எதிர்ப்பு!

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை கலைத்து, தமழ்நாடு பணிகள் தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த முடிவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியம்:

தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டெட் மற்றும் டி .ஆர்.பி போன்ற தேர்வுகள் மூலம் நியமனம் செய்யப்படுவர். இந்த தேர்வுகளில் தேர்வுகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுகிறது. சென்னை மற்றும் மதுரை உயர்நீதி மன்றங்களில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் காலிப்பணியிடங்களும் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.

இந்த ஆசிரிய தேர்வாணையத்தின் பிரச்சனைகளுக்கு சரியான திட்டமிடல் இல்லாமை, வெளிப்படை தன்மை இல்லாமை, கட்டமைப்பு குறைவு, பணி நியமனத்திற்கு தேவையான விதிகள் இல்லாமை, போதிய அனுபவமுள்ள பணியாளர்கள் இல்லாமை போன்றவை காரணம் என்கின்றனர். முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசாங்க குழு தேர்வாணையத்தை கலைக்க முடிவெடுத்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தமிழ்நாடு அரசு பணிகள் தேர்வாணையத்துடன் (TNPSC) இணைத்து தேர்வு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகின்றனர். இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் எதிர்த்துள்ளார். ஆசிரிய தேர்வாணையம் கலைக்கப்பட்டால் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதில், புதிய ஆசிரியர்களை பணியமர்த்துவதில் சிக்கல் ஏற்படும் என தெரிவித்துள்ளார். மாறாக ஆசிரியர் தேர்வாணையத்தின் குறைகளை போக்கி சிறப்பாக செயல்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.