யமஹா எக்ஸ்எஸ்ஆர் 125 ஆனது ஹைடெக் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது, இது சிறந்த, ஆல்ரவுண்ட் செயல்திறனை அளிப்பதாக அந்நிறுவனம் உறுதியளித்தது.
யமஹா நிறுவனம் அதன் புதிய எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக்கை ஐரோப்பியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது ஹோண்டா சிபி125ஆர், எஃப் மோண்டியல் எச்பிஎஸ் 125 மோட்டார் சைக்கிள்களுக்கு போட்டியாக உள்ளது. யமஹா ஐரோப்பிய சந்தைகளில் 125 சிசி வரிசையை அதிகரித்துள்ளது. இந்த பைக் MT-125 மற்றும் R125 போன்ற தளங்களை பயன்படுத்துகிறது
இந்த வாகனம் ஒரு தனித்துவமான தோற்றத்தை கொண்டுள்ளது, இது சாலைகளில் செல்லும் போது அனைவரது கவனத்தையும் பெறும். யமஹா எக்ஸ்எஸ்ஆர் 125 ஆனது ஹைடெக் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது, இது சிறந்த, ஆல்ரவுண்ட் செயல்திறனை அளிப்பதாக உறுதியளித்தது. 2021 யமஹா எக்ஸ்எஸ்ஆர் 125ன் முக்கிய அம்சங்களில் சில, வட்ட வடிவ எரிபொருள் டேங்க் ரெட்ரோ பார்வை, ஹெட்லேம்ப் மற்றும் ஒரு சிறப்பான இருக்கையை கொண்டுள்ளது.
யமஹா எக்ஸ்எஸ்ஆர் 125 எஞ்சின் 124 சிசி திரவ-குளிரூட்டப்பட்ட எஸ்ஓஎச்சி மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக 10,000 ஆர்பிஎம்மில் 14.7 பிஹெச்பி ஆற்றலை உற்பத்தி செய்கிறது மற்றும் 8,000 ஆர்பிஎம்மில் 11.5 peak torque உள்ளது. மேலும் இதன் மோட்டார் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கே.டி.எம் வழங்கும் டியூக் 125 போன்ற பல மாடல்கள் வாடிக்கையாளர்களிடையே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன தற்போது யமஹா நிறுவனமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, எப்போது யமஹா அதிகாரப்பூர்வமாக எக்ஸ்எஸ்ஆர் 125ஐ இந்தியாவுக்குக் கொண்டு வரும் என்ற தகவல் உறுதியாக தெரியவில்லை. எனினும் இந்தியாவில் எப்போதுமே ரெட்ரோ ஸ்டைல் கொண்ட மோட்டார்சைக்கிள் வரவேற்பு இருந்து வருகிறது.
யமஹா பைக்கில் சிறப்பான இருக்கை மற்றும் அலுமினியம் கட்டப்பட்ட கொண்டு வடிவமைக்கப்பட்ட பாகங்கள் உள்ளன. டெக் பிளாக், ரெட்லைன் மற்றும் இம்பாக்ட் மஞ்சள் உள்ளிட்ட வண்ணங்களில் இந்த மாடல் பைக்குகளை யமஹா வழங்குகிறது. இந்தியாவில் அடுத்ததாக எஃப்.இசட் பைக்குகளை அடிப்படையாக கொண்ட எஃப்.இசட்-எக்ஸ் பைக்கை களமிறக்க யமஹா தயாராகி வருகிறது. இதில் அதிகப்பட்சமாக 12.4 பிஎஸ் மற்றும் 13.8 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 149சிசி என்ஜின் பொருத்தப்படவுள்ளது.
இதனால் இந்தியாவின் மலிவான ரெட்ரோ ஸ்டைல் கொண்ட ஸ்ட்ரீட் பைக்காக இந்த யமஹா பைக் விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் தற்போது அறிமுகம் செய்யவுள்ள எக்ஸ்.எஸ்.ஆர்125 பைக் சற்று விலை அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.