தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்?

0
170

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இன்று வெளியிடப்பட்டு வருகிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வென்று ஆட்சியைக் யார் கைப்பற்றுவார் என்பது குறித்த வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளன. இதில் ரிபப்ளிக் சி.என்.எக்ஸ், இந்தியா டுடே, ஏபிபி, சி வோட்டர் வரை பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

இதில் தி.மு.க, கூட்டணி பெரும்பான்மை பெறும் என தெரிகிறது. இதில் தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இன்று வெளியாகியுள்ள கருத்து கணிப்புகளில், தமிழகத்தில் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மை பெறும் என்று தெரியவந்துள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:-

ரிபப்ளிக் சி. என்.எக்ஸ்: கருத்து கணிப்பு:

அ.தி.மு.க., கூட்டணி 56 – 58 இடங்களிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 இடங்களிலும், மற்றவை 6 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று வெளியிட்டுள்ளது.

பி- மார்க் கருத்து கணிப்பு:

அ.தி.மு.க., கூட்டணி 58 – 68 இடங்களிலும்,, தி.மு.க, கூட்டணி 165- 190 இடங்களிலும், மற்றவை 12 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கிறது.

டுடேய்ஸ் சாணக்கியா:

அ.தி.மு.க, கூட்டணி 46- 68 இடங்களிலும், தி.மு.க., கூட்டணி 164-182 இடங்களிலும் மற்றவை 4 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.

இந்தியா அஹெட் கருத்து கணிப்பு:

தி.மு.க., கூட்டணி 165 – 190 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 40 – 65 இடங்களிலும், மற்றவை 13 இடங்களிலும் வெற்றி பெறும் என்று வெளியிட்டுள்ளது.

சி ஓட்டர்ஸ்:

தி.மு.க, கூட்டணி 160 -172 தொகுதிகளிலும், அ.தி.மு.க, கூட்டணி 58 – 70 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது.