தென்காசி மாவட்ட கொரோனா நோயாளிகளின் உறவினர்களுக்கு புதிய தகவல்

0
331

தென்காசி மாவட்ட மக்களுக்கு ஒரு நற்செய்தி..
உங்களுக்கு அன்பானவர்கள் தெரிந்தவர்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரா?அவர்களின் உடல் நிலை குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டுமா?கவலை வேண்டாம்.உங்களுக்காக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் புதிதாக கொரோனா தகவல் மையம் தொடங்கப்பட்டுள்ளது.24 மணி நேரமும் செயல்படுகிறது..அதற்கான தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் அதைப் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற அறிவுறுத்தபடுகிறார்கள்..
அது மட்டுமல்லாது கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கும்,பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்க புதிதாக ஆலோசனை பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது..