YOUTUBE-வீடியோவை எளிமையாக டவுன்லோட் செய்வது எப்படி?

4
4695

நம்மில் பலரும் யூடியூபில் பார்க்கும் சில வீடியோக்களை டவுன்லோட் செய்ய முயற்சி செய்திருப்போம். ஒரு சிலர் மட்டும் ஏதோ ஒரு வழியில் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்வதுண்டு. பலருக்கும் யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்ய முயற்சித்து ஏமாற்றமே கிடைத்திருக்கும். அந்தவகையில் இந்த பதிவில் யூடியூப் வீடியோக்களை எளிமையான முறையில் டவுன்லோட் செய்வது எப்படி என்பதை பார்க்க இருக்கிறோம். இந்த பதிவின் மூலம் அனைவரும் பிடித்த யூடியூப் வீடியோக்களை டவுன்லோட் செய்து மகிழலாம்.

STEP:01

முதலில் VIDMATE APP-இணை டவுன்லோட் செய்து கொள்ளவும். (இது Google playstore -கிடைக்காது) கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொண்டு இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

STEP:02

யூடியூப் சென்று உங்களுக்கு பிடித்த வீடியோவினை எடுத்துக் கொள்ளவும்.

STEP:03

கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளவாறு SHARE பட்டனை கிளிக் செய்யவும்.

STEP:04

கிளிக் செய்ததும் கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ஒரு பகுதி திறக்கும். திறக்கப்பட்ட அந்த பகுதியில் படத்தில் அம்புக் குறியிட்டு காட்டியது போல் உள்ள Download Video– பட்டனை கிளிக் செய்யவும்.

STEP:05

கிளிக் செய்ததும் கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ஒரு பகுதி திறக்கும். அதில் உங்களுக்கு mp3 Format வேண்டும் என்றால் mp3 பகுதியில் கிளிக் செய்து Select செய்யலாம் அல்லது எந்த அளவில் வீடியோ வேண்டுமோ (Mp4 /HD) அதை select செய்து கொண்டு, அதன் பின்னர் கீழே உள்ள Download பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு பிடித்த வீடியோ டவுன்லோட் ஆகிவிடும். டவுன்லோட் செய்த வீடியோவை உங்கள் Gallery-இல் சென்று பார்த்து மகிழுங்கள்.

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.