டெல்லி: டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 1 மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேக் ராய் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச்சூழலால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரியும் பல ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மயானங்களில் சடலங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் கொத்துக்கொத்தாக நோயாளிகள் மரணமடைகின்றனர்.

டெல்லி பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்றைய தினம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12 நோயாளிகள் உயிரிழந்தனர். இந்த சூழலில் மேக்ஸ் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா வார்டில் பணியாற்றிய மருத்துவர் விவேம் ராய் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினசரி ஏற்பட்ட கொரோனா உயிர் பலிகளால், அவர் கடுமையான மன அழுத்தத்தால் இருந்ததாகவும், அதனாலேயே அவர் தற்கொலை செய்துகொண்டதாக உடன் பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here