மூன்றாவது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு: 35,000-க்கும் குறைந்த பாதிப்பு

0
188

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 404 பேர் உயிரிழந்துள்ளனர்

மூன்றாவது நாளாக குறையும் கொரோனா பாதிப்பு: 35,000-க்கும் குறைந்த பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதிலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தபோதிலும், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவந்தது. இருப்பினும், கடந்த இரண்டு தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துவருகிறது. கடந்த, 21-ம் தேதி உச்சபட்சமாக ஒருநாள் பாதிப்பு 36184 ஆக அதிகரித்தது.

ஆனால், தொடர்ந்து 3-வது நாளாக பாதிப்பு கணிசமாக குறைந்து பதிவாகியுள்ளது. நேற்று, தமிழகத்தில் புதிதாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 35483-ஆக குறைந்தது. இன்று அதைவிடவும் குறைவாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. இது நம்பிக்கை அளிக்கும் ஒன்றாக உள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,68,194 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதில், 34,867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 18,77,211 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 27,026 பேர் வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில், 15,54,759 பேர் கொரோனா பாதிப்பு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பால் நேற்று மட்டும் 404 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் மொத்த உயிரிழப்பு 20,872 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 4,985 பேருக்கும், கோயம்புத்தூரில் 4,277 பேருக்கும், செங்கல்பட்டில் 1,899 பேருக்கும், மதுரையில், 1,453 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.