BREAKING NEWS: தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவித்தது தமிழக அரசு – புதிய ஊரடங்கின் முழு விவரங்கள்

0
203

BREAKING NEWS: தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவித்தது தமிழக அரசு – புதிய ஊரடங்கின் முழு விவரங்கள்

தமிழகத்தில் தமிழக அரசு இன்று (22.05.2021)அறிவித்துள்ள புதிய ஊரடங்கின் முழு விபரங்கள் -PDF FILE

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.03.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. 
இந்தியாவில், தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் மார்ச் 2021 முதல் தொடர்ந்து இரண்டாவது அலையாக கோவிட் தொற்று உறுதியாகும் எண்ணிக்கை அதிகரித்து தற்பொழுது நாளொன்றுக்கு சுமார் 36,000 என்ற அளவிற்கு புதிய தொற்றுகள் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் 21.05.2021-ஆம் நாள் கணக்கீடுபடி, தற்போது நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 2.74 லட்சமாக உள்ளது.


 தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, கடந்த 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் சில தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நடைபெற்ற முதல் மேலும் , 09.05.2021 அன்று அமைச்சரவைக் கூட்டத்திலும், கொரோனா நோய்த் தொற்று பரவல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், 13.05.2021 அன்று நடைபெற்ற அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த விவாதிக்கப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இது மட்டுமன்றி, 14.05.2021 அன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோருடன் கலந்தாலோசித்து, தமிழ்நாட்டில் நோய்ப் பரவலைத் தடுக்க 15.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை ஏற்கனவே அமலில் உள்ளகட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. 
மேலும், கடந்த 20.05.2021, 21.05.2021 ஆகிய நாட்களில், சேலம், திருப்பூர், கோயம்புத்துார், மதுரை, திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, நோய்த் தடுப்பு பணிகளை மேலும் தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் இதர துறை அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளேன்