அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: ‘அசுரன்’ பட நடிகரும் கொரோனாவுக்கு பலி!

0
292

தமிழ் திரையுலகை சேர்ந்த ஒருசிலர் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பலியாகியும் வருவது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது. இன்று அதிகாலை கூட பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா கொரோனாவுக்கு பலியானார் என்ற செய்தியில் இருந்து திரையுலகினர் இன்னும் மீண்டு வரவில்லை. மேலும் அருண்ராஜா காமராஜ் சகோதரருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

இந்த நிலையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக ’அசுரன்’ படத்தில் நடித்த நடிகர் ஒருவரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ சுசீந்திரன் இயக்கிய ’வெண்ணிலா கபடி குழு’ உட்பட பல படங்களில் நடித்தவரும், சமீபத்தில் வெளியான ’அசுரன்’ திரைப்படத்தில் சூப்பர் கேரக்டர் ஒன்றில் நடித்தவர் நடிகர் நிதிஷ் வீரா என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் நடிகர் நிதிஷ்வீரா கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் காலமானார் என்ற செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா என்ற கொடிய அரக்கனுக்கு அடுத்தடுத்து திரையுலக பிரமுகர்கள் பாதிக்கப்பட்டும் பலியாகியும் வருவது திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக உள்ளது