ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்ற அருமையான வாய்ப்பு – சென்னை OTA-வில் அக்டோபர் முதல் பயிற்சி தொடக்கம்!

0
210

ராணுவ காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்ற அருமையான வாய்ப்பு - சென்னை OTA-வில் அக்டோபர் முதல் பயிற்சி தொடக்கம்!

இந்திய ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றுவதற்கான 191 காலிப்பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை ராணுவம் வெளியிட்டுள்ளது. தகுதி வாய்ந்த திருமணமாகாத ஆண்கள், பெண்கள் மற்றும் கணவரை இழந்த ராணுவ வீரர்களின் மனைவிகளும் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் (joinindianarmy.nic.in.) வரும் ஜூன் மாதம் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Short Service Commission பிரிவில் 191 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு வரும் அக்டோபர் மாதம் முதல் சென்னை பரங்கிமலையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையத்தில் பயிற்சி தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, தேர்வு முறை, சம்பளம் உள்ளிட்ட பிற தகவல்களை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.


காலிப்பணியிடங்கள்:

ஆண்கள் : 175
பெண்கள் : 14
கைம்பெண்: 02

மொத்தம்: 191

கல்வித்தகுதி:

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதி ஆண்டு தேர்வு எழுதியவர்களும் விண்ணப்பிக்கலாம். இறுதியாண்டு தேர்வு எழுதி தேர்வாகும்பட்சத்தில் சென்னையில் பயிற்சி தொடங்கிய 12 வாரங்களுக்குள் பொறியியல் பட்டத்தை சமர்பிக்க வேண்டும்.

பொறியியல் பிரிவுக்கு தகுந்தபடி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளன.

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர்கள் 20 முதல் 27 வயதுடையவர்களாக இருத்தல் அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

joinindianarmy.nic.in. என்ற ராணுவத்தின் இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு நடைபெறும். விண்ணப்பங்கள் இறுதி செய்யப்பட்ட பின்னர் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு அதற்கான விவரம் விண்ணப்பதாரர்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்தில் தேதியை தேர்வு செய்ய வேண்டும். இது முதலில் வருபவர்களுக்கு ஒதுக்கப்படும்.

தேர்வு செய்யப்படுபவர்கள் லெஃப்டினண்ட் பிரிவில் அதிகாரியாக பணிபுரியலாம். குறுகிய கால (10 ஆண்டுகள்) அடிப்படையிலான பணி இது. அதே நேரத்தில் பணி நிறைவு காலத்தில் விருப்பத்தின்/தகுதியின் அடிப்படையில் பணி நீட்டிப்பு செய்யப்படலாம்.

பயிற்சிக்காலம் 49 வாரங்கள் ஆகும். பயிற்சிக்காலத்தில் திருமணம் செய்து கொள்ள அனுமதி கிடையாது. பயிற்சிக்காலத்தில் திருமணம் செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.