ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால பி.எட்‌. படிப்பு தற்காலிக நிறுத்தம்‌- தேசிய ஆசிரியர்‌ கல்விக்‌ குழுமம்‌ அறிவிப்பு

0
368

ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால
பி.எட்‌. படிப்பு தற்காலிக நிறுத்தம்‌- தேசிய ஆசிரியர்‌ கல்விக்‌ குழுமம்‌ அறிவிப்பு


பிஎஸ்சி, பிஏ உள்ளிட்ட இளநிலைபட்டப்‌ படிப்புகளை முடித்து, பி.எட்‌. பயிலும்‌ மாணவர்களின்‌ வசதிக்காக பி.ஏ.பி.எட்‌, பிஎஸ்சி. பி.எட்‌ ஆகிய பிரிவுகளில்‌ 4 ஆண்டுகால ஒருங்கிணைந்த படிப்பை 2021-22 கல்வியாண்டு முதல்‌ அறிமுகம்‌ செய்யப்படும்‌ என்று தேசிய ஆசிரியர்‌ கல்விக்‌ குழுமம்‌ (என்சிடிஇ) கடந்த ஆண்டு அறிவித்தது. இதற்கென தனியாக தேசிய அளவில்‌ நுழைவுத்‌ தேர்வு நடத்தப்படும்‌ என்றும்‌ தெரிவிக்கப்‌பட்டது. இதையடுத்து, தமிழகத்தில்‌ தனியார்‌ பி.எட்‌. கல்லூரிகள்‌ 4 ஆண்டுகால படிப்பை வரும்‌ கல்வியாண்டு முதல்‌ தொடங்க தமிழ்நாடு ஆசிரியர்‌ கல்வியியல்‌ பல்கலைக்கழகம்‌ அனுமதி வழங்கியது.

இந்நிலையில்‌, ஒருங்கிணைந்த ஆண்டுகால படிப்பு தொடங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக என்சிடிஇ அறிவித்துள்ளது. பட்டப்‌ படிப்பு முடித்த பிறகு பி.எட்‌.படிப்பை தனியாக படிப்பதால்‌ ஓராண்டு காலம்‌ கூடுதலாக
செலவாகும்‌. இதை தவிர்க்கவே, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம்‌ செய்வதாக என்சிடிஇ தெரிவித்திருந்தது. இந்நிலையில்‌, 4 ஆண்டுகால படிப்பை அறிமுகம்‌ செய்வதில்‌ சில நடைமுறை சிக்கல்கள்‌ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால
படிப்புக்காக நடத்தப்படும்‌ நுழைவுத்‌ தேர்வை, தற்போது பட்டப்‌படிப்பை முடித்து வெளியேறும்‌ மாணவர்களால்‌ எழுத முடியாது என்று கூறப்படுள்ளது. இந்த ஒருங்‌ணைந்த 4 ஆண்டுகால படிப்பு 2022-23 கல்வியாண்டில்‌ அமலுக்கு
வரும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.