பெண்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய (வர்க் ஃப்ரம் ஹோம்) 10 சிறந்த வேலை வாய்ப்புகள் இதோ…

0
222

வீட்டிலிருந்தே பார்க்கக்கூடிய வேலைகளின் பட்டியலினை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

குழந்தைகள் மற்றும் குடும்பத்தைக் கவனித்து கொள்ளும் பொறுப்பினால் வேலைக்குச் செல்ல முடியாத பெண்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. மேலும் அவர்கள் தங்களது திறன்களைப் பயன் பெறும் வகையில் பயன்படுத்திக்கொள்வதற்கும் இலகுவான வாய்ப்பை வழங்குகிறது.

வீட்டிலிருந்தபடியே வேலை செய்வதால் கிடைக்கும் நன்மைகள் யாவை? வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது பல நன்மைகளைத் தருகிறது. அவை இலகுவான வேலை நேரம் (தாய்மார்கள்) உங்கள் குழந்தைகளின் அருகிலேயே இருக்கலாம் தினமும் அலுவலகத்திற்கு பயணம் செய்யும் நேரத்தினை தவிர்க்கலாம் பணம் சம்பாதிக்கலாம் வீட்டிலிருந்தாலும் மற்றவர்களுடன் தொடர்பில் இருக்கலாம் சீராகச் கையாளக்கூடிய வேலையும் குடும்ப வாழ்க்கையும் வீட்டிலிருந்தபடியே செய்யும் வேலைகள் பல நேரங்களில் மிகப்பெரிய சவாலாக இருக்கலாம்.

அவற்றில் உள்ள சில குறைகள்: ஆரம்பத்தில் காணப்படும் தடுமாற்றம் அரைகுறையான நிறைவில்லாத வழிநடத்துதல் வேலையில் கவனம் செலுத்தமுடியாத நிலை வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் தானே என்று அவர்களை முறையாக நடத்தத் தெரியாத முதலாளிகள் முழுநேர அலுவலக வேலையைப் போல அதிகமாக சம்பளம் பெற முடியாது என்றாலும் எப்போதுமே அப்படி இருக்காது இந்தியாவில் வீட்டிலிருந்தே பெண்கள் செய்யக்கூடிய 10 வேலைகள் யாவை? வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலைகள் எண்ணற்றவை இருந்தாலும் எனக்கு தெரிந்த சிலவற்றை இங்கே தருகிறேன்.

பகுப்பாய்வு எழுத்தாளர் (Content Writing)

பகுப்பாய்வு எழுத்தாளர் எழுதுதவதற்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளது. ஏன் Googleஐ எல்லோரும் பயன்படுத்துகிறார்கள்? தேவையான தகவல்களுக்காக! என்ன தகவல்கள்! அவர்களுக்கு வேண்டிய தகவல்கள். இந்த தகவல்கள் உங்களைப் போன்ற எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டவை, இதற்கு மொழித் திறன் தவிர வேறு தேவையில்லை. உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுத மொழித்திறன் குறைவாக இருந்தால் கவலை வேண்டாம் பிற இந்திய மொழிகளிலும் வாய்ப்புகள் தேவையான அளவு உள்ளது.

சமூக ஊடக நிர்வாகம் (Social media management)

சமூக ஊடக மேலாண்மை என்பது தேவையானது என்றாலும் பல நிறுவனங்களுக்கு இதற்காக அதிக நேரம் ஒதுக்கமுடிவதில்லை. இன்று எல்லா நிறுவனங்களும் பெரியதோ சிறியதோ (சிறிய உள்ளூர் கடைகள் கூட) சமூக ஊடக பக்கங்களைக் கொண்டுள்ளன. சமூக ஊடகங்களை நிர்வாகிப்பது இந்த நிறுவனங்களுக்கு போதிய நேரம் இருக்காது. எனவே, அவர்கள் எப்போதும் அவற்றைக் கையாளக்கூடிய படைப்பாற்றல் நிறைந்த நபர்களைத் தேடுவார்கள். சமூக ஊடகங்கள் உங்களுடைய விருப்பமாகஇருந்தால், நீங்கள் இந்த துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராய வேண்டும். உங்களுக்கு உதவிட சமூக ஊடக நிர்வாகம் மற்றும் நுணுக்கங்களை அறிய நீங்கள் குறுகிய கால ஆன்லைன் படிப்புகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

காணொளி பதிவுகள் (Vlogging)

வீடியோ வடிவத்தில் வலைப்பதிகள் இவை. பல YouTube உணவு சேனல்களை நீங்கள் பாத்திருக்கலாம். சமையலில் அசத்தும் இல்லத்தரசிகளின் சொந்த பதிவுகளே இவை. உணவு மட்டுமல்ல, பயணங்கள், DIY கிராஃப்ட், தகவல்கள், குழந்தை வளர்ப்பு மற்றும் ஊக்கமளிக்கும் பேச்சுகளுடனும் பதிவுகள் உள்ளன. இது போன்ற வீடியோ பதிவுகளை க்களை உருவாக்கும் திறன் உங்களிடம் இருந்தால், நீங்கள் சொந்தமாக ஒரு YouTube சேனலைத் தொடங்கலாம். உங்கள் சேனல் குறிப்பிட்ட எண்ணிக்கையில்

பார்வையாளர்களை பெறும் போது அதற்கான சன்மானத்தினைப் பெறத்துவங்குவீர்கள். உங்கள் பதிவுகள் அதிகமான பார்வையார்களைப் பெற்றால் நீங்கள் விளம்பரங்கள் மூலமாகவும் சம்பாதிக்கலாம். உங்களுடைய வீடியோ வலைப் பதிவுகளை தயாரிக்க உயர்தர கேமரா அல்லது கேமரா தொலைபேசி மற்றும் மைக் மட்டுமே உங்களுக்குத் தேவை.

செயல் பயனாளர் (Influencer)

ட்விட்டர் அல்லது இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் நீங்கள் செயல் பயனாளராக செயல்படலாம். பிரபலமான பொருட்கள் மிகப் பெரிய அளவில் பயனாளிகளை சென்று அடைந்திட வாய் மொழி மூலமான தகவல்தொடர்பு முக்கிய பங்கு வகிப்பதால் உங்களுடைய சேவை தேவைப்படுகிறது. நீங்கள் சமூக ஊடகங்கள் மூலம் ஒரு தயாரிப்பை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் பல தயாரிப்புகளையும் மதிப்பாய்வு செய்யலாம். இவை உங்களுக்கு தேவையான வருமானத்தினை பெற்றுத் தருகிறது.

வலைப்பதிவுகள் (Blogging)

வலைப்பதிவுகள் மூலம் வருமானம் பெறுவது நீண்ட நாட்களாக உள்ளது. Google தேடல் முடிவுகளில் முதலிடம் பெறுவதும், உங்கள் வலைப்பதிவுகளுக்கு அதிகமான பார்வையாளர்களைப் பெறுவதும் கடினமான சவாலாக இருக்கும். ஆனால், நீங்கள் அதிக பார்வையாளர்களைப் பெறத் துவங்கியவுடன் விளம்பரங்களுக்கும், சந்தைப்படுத்தல் மூலமாகவும் வருமானம் பெறமுடியும்.

குறிப்பிட்ட ஒரு மாதத்தில் பல தனிப்பட்ட பார்வையாளர்கள் உங்கள் பதிவுகளுக்கு கிடைத்தால், விளம்பர வலைப்பதிவுகளுக்கு எழுதும் வாய்ப்பு பல பிரபலமான பொருட்களிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு தேவை எழுதும் திறன் மட்டுமல்ல விடாமுயற்சி மற்றும் பொறுமையம் தான்.

வரைகலை வடிவமைப்பாளர் (Graphics designing)

எழுத்தாளர்களைப் போலவே, வரைகலை வடிவமைப்பாளருக்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஃபோட்டோஷாப் மற்றும் பல கிராபிக்ஸ் மென்பொருள்கள் பற்றிய அறிந்த ஒரு படைப்பாற்றல் கொண்டவராக நீங்கள் இருந்தால், இந்தத் திறமை உங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய நிறைய வாய்ப்புகளைக் கொண்டுவரும். இன்று சமூக ஊடகங்களில் பல படைப்புகள் மக்களின் கவனத்தை ஈர்க்கின்றன. கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் தான் இந்த கவனத்தை கொண்டுவரவும் சமூக ஊடகங்களில் அதிக ஈடுபாடு கொள்ளவும் உதவுகின்றனர்.

வீடியோ கிராபிக்ஸ் (Video graphics)

ஒரு கருத்தினை பல புகைப்படங்கள் கொண்டு தொகுப்பதன் மூலம் அல்லது ஃபோட்டோஷாப், மற்றும் இல்லஸ்ட்ரேட்டர் பயன்படுத்தி எளிய அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் ஆகியவற்றினை உருவாக்கி வீடியோ கிராபிக்ஸ் தயாரிக்கப்படுகின்றன. வீடியோ கிராபிக்ஸ் தயாரிப்பதில் உங்களுக்கு திறமை இருந்தால், நீங்கள் இதை முயற்சி செய்யலாம். உங்கள் வீடியோக்களை பிரபலமான பொருட்களுக்கு நீங்கள் விற்கலாம் மற்றும் அவர்களின் சமூக ஊடக செயல்களிலும் பங்கேற்று உதவலாம்.

டிஜிட்டல் சந்தைப்படுத்தல் (Digital marketing)

சமூக ஊடகங்கள், அதற்கேற்ற தகவல்கள் மற்றும் தேடுபொறி உகப்பாக்கம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்தால், அது டிஜிட்டல் சந்தைப்படுத்தல் ஆகும். மார்க்கெட்டிங் மீது ஆர்வம் இருந்தால், இதனை நீங்கள் முயற்சி செய்யலாம். இந்தியாவில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் வேலைகள் ஏராளமாக உள்ளன. டிஜிட்டல் வளர்ச்சி தற்போது மிக அதிகமாக உள்ளது. இத்துறையில் நீங்கள் வெற்றிப் பெற வேண்டுமென்றால் அக்காலத்தில் நிலவிடும் போக்கினை பின்பற்றுவதாகும். பிரபலமான மார்க்கெட்டிங் வலைப்பதிவுகளை பின்பற்றுவதன் மூலம் சமீபத்திய போக்குகளை அறிந்து கொள்ளலாம்.

வலை பயன்பாடு/வலை அபிவிருத்தி (App/web development)

அலுவலகம் இல்லாமல் தொலைவில் இருந்து ஆதரிக்கக்கூடிய வலைத்தளம் உருவாக்கும் நிபுணர்களை தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. நீங்கள் வலைதள வடிவமைப்பில் ஆர்வம் உள்ளவராக இருந்தால், இந்த வேலையினை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்நிறுவனங்கள் தங்களது வலைத்தளத்தினை முழுமையாக வடிவமைக்கவோ அல்லது பயன்பாட்டு மேம்பாட்டிற்கான சிறிய வடிவமைப்பு மாற்றங்களாகவோ இருக்கலாம்.

பெரும்பாலும், ஸ்டார்ட்-அப்கள் இது போன்ற உதவியை விரும்புகின்றன. ஏனென்றால் அவை குறைந்த செலவில் வேண்டிய வேலைகளை செய்து கொள்கின்றன. அனுபவம் வாய்ந்த டெவலப்பர்களையும் பெரிய நிறுவனங்கள் விரும்புகின்றன.

மொழிபெயர்ப்பாளர் மற்றும் குரல் கொடுக்கும் கலைஞர்கள்

உலகிற்கு நிறைய மொழிபெயர்ப்பாளர்கள் தேவை. மொழிபெயர்ப்பு உங்களது சொந்த மொழியிலோ அல்லது வெளிநாட்டு மொழியிலோ இருக்கலாம். நீங்கள் ஒரு மொழியியலாளர் என்றால், நீங்கள் இந்த வேலையைச் செய்யலாம். யூடியூப் மற்றும் வீடியோ டுடோரியல்கள் தற்போது மிகவும் பிரபலமாக இருப்பதால், அதிக எண்ணிக்கையில் வாய்ஸ் ஓவர் கலைஞர்களும் தேவைப்படுகின்றனர்.

VO கலைஞர்கள் வீடியோ தயாரிப்பவர்களுக்கு மிகவும் அவசியம். நீங்கள் இருமொழி பேசுபவராக இருந்தால், நீங்கள் பல மொழிகளுக்கு VO கலைஞராக இருக்கலாம். வீட்டிலிருந்து செய்யக்கூடிய வேலையை எங்கு தொடங்குவது எப்படி தொடங்குவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால் – இப்போதே தொடங்கவும்! உங்களுடைய திறன்களை முதலில் மேம்படுத்துங்கள். பின்பு அதற்கேற்ற வேலையைத் தேர்ந்து எடுங்கள். வேலை மீது ஆர்வமாக இருங்கள். ஆனால் பணம் சம்பாதிப்பதற்காக மட்டும் வேலையை தேர்ந்து எடுக்க வேண்டாம்.

உங்களது விவரங்களை Linkedin வலைத்தளத்தில் புதுப்பிக்கவும். தங்களது அலுவலகத்திற்கு தேவையான வேலையாட்களை இதிலிருந்து தான் பெறுகின்றனர். ஃப்ரீலான்ஸ் வலைத்தளங்கள் மூலமாகவும் நீங்கள் வேலைகளை தேர்வு செய்யலாம். கடைசியாக ஆனால் ஒருபோதும் குறைந்தது அல்ல, நிறைய பேருடன் இணைக்கவும்.