பத்தாம் வகுப்பிற்கு அரசு மீண்டும் பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது – பள்ளிக்கல்விதுறை

0
233

பத்தாம் வகுப்பிற்கு அரசு மீண்டும் பொதுத் தேர்வு நடத்த இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது -என்று பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்தது இந்நிலையில் நேற்று தொலைக்காட்சி மற்றும் ஒரு சில இணையதளங்களில் பத்தாம் வகுப்பிற்கு அரசு மீண்டும் பொதுத் தேர்வு நடத்த இருப்பதாகவும் மதிப்பெண் வேண்டும் என்று நினைப்பவர்கள் மட்டும் தேர்வு எழுதிக் கொள்ளலாம் என்றும் செய்திகள் வெளியானது. இச்செய்தியை கேட்டதும் மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் மன உளைச்சலில் சிக்கினர்.
இந்த தகவல் முற்றிலும் தவறானது எனவும் அப்படி ஒரு தேர்வு நடத்த அரசு திட்டமிடவில்லை எனவும் பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.