தமிழக தட்டெழுத்து, சுருக்கெழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

0
344

தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மூலமாக வணிகவியல் பாடங்களுக்கான அரசுத் தொழில்நுட்ப தேர்வுகள் ஆனது நடத்தப்பட இருப்பதாக ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதியுடையோர் கீழே உள்ள தகவல்களை நன்கு படித்து விட்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம் அறிவுறுத்திக் கொள்கிறோம்.

அரசு தொழில்நுட்ப தேர்வுகள் :

தட்டெழுத்து, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் பாடங்களுக்கான தேர்வுகள் ஆனது ஏப்ரல் மாதம் அரசு தொழில்நுட்ப துறையினால் நடத்தப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம் :

பதிவு செய்வோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.20/- செலுத்த வேண்டும்.

தேர்வு கட்டணம் :

தேர்வு எழுதுவோர்க்கு பிரிவு வாரியாக கீழே கட்டணம் வரையறுக்கப்பட்டுள்ளது.

  • இளநிலை – ரூ.65/-
  • இடைநிலை – ரூ.80/-
  • முதுநிலை – ரூ.85/-
  • உயர்வேகம் – ரூ.130/-

கட்டணமே செலுத்த கடைசி நாள் (அபராதம் இன்றி) – 26.03.2021

விண்ணப்பிக்க முறை :

இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை வரும் 26.03.2021 அன்றுக்குள் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 31.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

TNDTE Official Notification PDF