மத்திய அரசின் அறிவிப்பு படி ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க மார்ச் மாதம் 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
மத்திய அரசு அறிவிப்பு:
கடந்த ஆண்டு மத்திய அரசு ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கான கடைசி தேதி 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி என அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா காரணமாக இந்த அறிவிப்பிற்கான கடைசி தேதியை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
இதற்கு மேல் இந்த கால வரம்பை நீட்டிக்க வாய்ப்புகள் இல்லை என மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தது. இதன்படி மார்ச் மாதம் 31 ஆம் தேதிக்குள் அனைவரும் ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யாதவர்களுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பான் கார்டு செயலிழந்து விடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதற்கும் மேல் பான் கார்டுகளை இணைக்கத்தவர்கள் மீது வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ.10,000 அபராதம் வசூலிக்கப்படும். வங்கிகளில் ரூ.50,000 மேல் பரிவர்த்தனை செய்ய பான் கார்டு முக்கியமாகும். அவ்வாறு செயலிழந்த பான் கார்டு வழங்கும் நபர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுவது வருமான வரி சட்டத்தின் கீழ் சரியாகும்.
Thanks for guidance