பொதுவாக நாம் சந்திக்கின்ற மிக பெரிய பிரச்சினைதான் அரசு அலுவலகங்களில் நமக்கு அவசியம் தேவைப்படும் சான்றுதல்களான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்ற பலவகையான சான்றிதழ்களை அந்த அலுவலகங்களில் பெறுவதுதான். இருப்பினும் இதுமாதிரியான சான்றிதல்களை நாம் வீட்டில் இருந்தபடியே மிக எளிமையாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறமுடியும்.
அந்த வகையில் இந்த பதிவில் புதிய ரேஷன் கார்டு (New ration card apply in tamil) ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்படி அப்ளை செய்து பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் படித்தறிவோம்.
ரேஷன் கார்டு அப்ளை செய்வது எப்படி?
உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnpds.gov.in/ என்ற இணையதளம் மூலம் ரேஷன் கார்டை ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே அப்ளை செய்து பெறலாம். இந்த TNPDS இணையதளம் மூலம் எப்படி குடும்ப அட்டை விண்ணப்பித்து பெறலாம் என்பதை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
குறிப்பு:-
ஆன்லைன் மூலம் புதிதாக ரேஷன் கார்ட் அப்ளை செய்ய நினைப்பவர்கள், தங்களுடைய பெயர் வேற எந்த குடும்ப அட்டையிலும் இருக்க கூடாது. எனவே தங்களுடைய பெயரை குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கம் செய்து விட்டுத்தான். புதிய குடும்ப அட்டைக்கு அப்ளை செய்ய வேண்டும். பெயர் நீக்கம் செய்வதும் ஆன்லைன் மூலமாக எளிதாக செய்துவிடலாம் அதை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.
ஸ்டெப்: 1
முதலில் www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இப்பொழுது TNPDS-யின் முகப்பு பக்கம் ஓபன் ஆகும். அவற்றில் மின்னணு அட்டை சேவைகள் என்று இருக்கும். அவற்றில் மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை தேர்வு செய்யுங்கள்.
ஸ்டெப்: 2
மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்பதை தேர்வு செய்த பின் மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல், மற்றொரு பக்கம் திறக்கும். அவற்றில் குடும்ப தலைவர் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர், முகவரி, எந்த மாவட்டம், எந்த மண்டலம் அல்லது வட்டம், எந்த கிராமம், அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், கிராமம், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அந்த பக்கத்தில் டைப் செய்ய வேண்டும்.
ஸ்டெப்: 3
அதன் பிறகு குடும்ப தலைவர் புகைப்படம் என்ற இடத்தில், குடும்ப தலைவரின் புகைப்படத்தை 5.0 MB அளவுக்குள் உள்ள jpeg, jpg, png புகைபடத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஸ்டெப்: 4
குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர் விவரங்களைச் சேர்ப்பதற்கு, “உறுப்பினரைச் சேர்க்க” என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும். அவற்றை கிளிக் செய்ததும் கீழே காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு படிவம் திறக்கும். அவற்றில் முதலில் குடும்பத் தலைவரின் விவரங்களை உள்ளிட வேண்டும். அதாவது குடும்ப தலைவரின் பிறந்த தேதி, பாலினம், தேசிய இனம், உறவு முறை, தொழில், மாத வருமானம், வாக்காளர் அட்டையின் எண், ஆதார் எண் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
ஸ்டெப்: 5
அதன் பிறகு மற்ற ஆவணங்கள் என்ற இடத்தில் குடும்ப தலைவரின் ஆதார் அட்டையின் இரண்டு பக்கத்தையும் ஸ்கேன் செய்து, பதிவேற்ற வேண்டும்.
அதன் பிறகு குடும்ப உறுப்பினர்களை சேமி என்ற ஒரு பட்டன் இருக்கும் அதனை கிளிக் செய்தால் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சேமிக்கப்படும்
பின் இவ்வாறு தங்கள் குடும்பத்தில் உள்ள எத்தனை உறுப்பினர்களின் விவரங்களை உள்ளிட வேண்டுமோ. அவர்களின் விவரங்களையும் இவ்வாறே அதாவது அவர்களின் பிறந்த தேதி, பாலினம், தேசிய இனம், உறவு முறை, தொழில், மாத வருமானம், வாக்காளர் அட்டையின் எண், ஆதார் எண் போன்ற விவரங்களை உள்ளிட்டு சேர்த்துக்கொள்ளலாம்.
New ration card apply in tamil step: 6
அடுத்ததாக அட்டை தேர்வு தேர்ந்தெடுக்கவும் என்ற இடத்தில் பண்டகமில்லா அட்டை, அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, மற்றவை என நான்குவகையான அட்டைகள் இருக்கும். அவற்றில் தங்களுக்கு என்ன அட்டை வேண்டுமோ அந்த அட்டையை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
ஸ்டெப்: 7
அதன் பிறகு குடியிருப்புச் சான்று என்று இருக்கும் அவற்றில் ஆதார் அட்டை, மின்சார கட்டணம், வங்கி கணக்குப் புத்தகத்தின் முன் பக்கம், எரிவாயு நுகர்வேர் அட்டை, சொந்த வீடு இருந்தால் அதன் சொத்து வரி, பாஸ்போர்ட் என்று சில தெரிவுகள் இருக்கும் அவற்றில் ஏதாவது ஒரு குடியிருப்புச் சான்று ஆவணங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பின் தேர்வு செய்த அந்த ஆவணத்தின் நகலை Choose file என்ற இடத்தில் கிளிக் செய்து அந்த ஆவணத்தை பதிவேற்ற வேண்டும். (குறிப்பு: நீங்கள் 1.0 MB அளவு png, gif , jpeg மற்றும் pdf கோப்புகளை பதிவேற்ற முடியும்)
குறிப்பு:* தற்போதைய முகவரி ஆதார் அட்டையிலுள்ள முகவரியிலிருந்து வேறுபட்டிருந்தால் முகவரி சான்று தேவை*.
ஸ்டெப்:8 New ration card apply online
அடுத்ததாக எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் உள்ளிட வேண்டும். தங்களிடம்
எரிவாயு இணைப்பு உள்ளது என்றால், கீழே கட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் ஒரு படிவம் இருக்கும் அவற்றில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக பூர்த்திசெய்ய வேண்டும்.
ஸ்டெப்: 9
உறுதிப்படுத்தல் என்பதை இப்பொழுது கிளிக் செய்யுங்கள் அவற்றில் தாங்கள் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்கள் சரியாக இருந்தால், பதிவு செய் என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.
பதிவு செய்தபிறகு தங்களுடைய கைபேசி எண்ணிற்கு ஒரு குறிப்பு எண் அனுப்பப்படும், அந்த குறிப்பு எண்ணை தாங்கள் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணை வைத்துதான் தங்களுடைய மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலையை சரி பார்க்க முடியும்.
ஸ்டெப்: 10
தாங்கள் விண்ணப்பித்த மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலையை அறிய, www.tnpds.gov.in இணையதளத்தின் முகப்பு பக்கத்திற்கு திரும்பவும் செல்லுங்கள். அவற்றில் மின்னணு அட்டை சேவைகள் என்ற இடத்தில், மின்னனு அட்டை விண்ணப்பத்தின் நிலை என்பதை கிளிக் செய்யுங்கள்.
இப்பொழுது மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் திறக்கப்படும் பக்கத்தில் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்து பின் பதிவு செய்ய என்பதை கிளிக் செய்யுங்கள்.
New ration card apply in tamil step: 11
பிறகு மேல் காட்டப்பட்டது போல் ஒரு பேஜ் திறக்கப்படும் அவற்றுள் தாங்கள் விண்ணப்பித்த படிவத்தை டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ளலாம். இந்த விண்ணப் படிவம் நாம் விண்ணப்பம் செய்ததற்கான ஒரு ஆதாரம். நாம் புதிதாக ஒரு ரேஷன் கார்ட் அப்ளை செய்தால் அதற்கு நான்கு அல்லது ஐந்து வகையான செயல்முறைகள் (PROCESSING) நடைபெறும். அவற்றில் ஒரு செயல் முறை தங்கள் வீட்டிற்கு நேரடியாக வந்தும் சோதனை செய்வார்கள்.(சிலர் லஞ்சமும் கேட்பார்கள்)
முதலில் உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படும், பின்னர் அச்சிடப்படும். அட்டை கையில் கிடைக்க சில மாதங்கள் எடுக்கும் என்றாலும், நம் அட்டை அங்கீகரிக்கப்பட்டு அட்டையின் நிலை இயக்கத்தில் இருந்தாலே நம்மால் பொருட்கள் வாங்க முடியும்.
இந்த அனைத்து processing நடைபெற்ற பிறகு உங்கள் மின்னணு அட்டை அச்சிடப்படும். இறுதியாக தங்களுடைய கைபேசி எண்ணிற்கு அட்டை அச்சிடப்பட்ட தகவல் அனுப்பப்படும். அந்த பதிவு எண்ணெய் எடுத்து கொண்டு தங்கள் ஊரில் அருகாமையில் உள்ள விநியோக மையங்களுக்கு சென்றோ அல்லது தாலுகா அலுவலகத்திற்கு சென்றோ தங்களுடைய புதிய ரேஷன் கார்டினை பெற்று கொள்ளலாம்.