ஆன்லைன் முறை 10th, +2, Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி?

0
581

TN employment registration online:- 10th, +2, Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் எப்படி புதியதாக பதிவு செய்ய வேண்டும் என்பதை பற்றி இப்போது நாம் படித்தறிவோம். இனி பதிவு செய்வதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. நம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறை வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

சரி வாங்க ஆன்லைன் முறை 10th, +2, Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வது எப்படி? என்று இப்போது நாம் தெரிந்து கொள்வோம்..!

தமிழ்நாடு அரசு ஆன்லைன் வேலைவாய்ப்பு பதிவு 2020 ஸ்டேப்: 1

10th, +2, Degree மற்றும் PG முடித்தவர்கள் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்வதற்கு முதலில் tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்.

Employment pathivu seivathu eppadi step: 2

அவற்றில் Click here to visit Employment Exchange Website என்பதை கிளிக் செய்ய செய்யவேண்டும்.

இப்பொழுது புதிதாக ஒரு பேஜ் ஓபன் ஆகும். அவற்றில் For new User ID Registration என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

இப்போது Terms and Conditions என்ற பகுதி திறக்கப்படும் அவற்றில் உள்ள அறிவிப்பை கவனமாக படித்துவிட்டு I Agree என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Employment registration online in tamil step: 3

இப்பொழுது மற்றொரு பக்கம் ஓபன் ஆகும். அவற்றில் பதிவாளரின் பர்சனல் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதாவது பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர், ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID கொடுக்கவும், பின்பு தந்தையின் பெயர், பிறந்த தேதி, ரேஷன் கார்ட் நம்பர் மற்றும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும்.

save என்பதை கிளிக் செய்தபிறகு you want to continue? என்று கேட்கப்படும் அப்போது ok என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Employment new registration online tamilnadu step: 4

அதன் பிறகு மற்றொரு பக்கம் ஓபன் ஆகும். அவற்றில் தங்களுடைய பர்சனல் விவரங்களை கொடுக்க வேண்டும். அன்னையின் பெயர், பாலினம், married & unmarried என்ற விவரங்களை கொடுக்கவேண்டும், இனம், சாதி, சாதி சான்றிதழில் கொடுக்கப்பட்டுள்ள எண் போன்ற விவரங்களை பூர்த்தி செய்து விட்டு next என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

TN employment new registration step: 5

இப்பொழுது மற்றொரு பகுதி ஓபன் ஆகும், அவற்றில் முகவரி என்ற இடத்தில் தங்களின் குடும்ப அட்டையில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை கொடுக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் என்ன மாவட்டம் என்பதை தேர்வு செய்துக்கொள்ளவும். அதன் பிறகு name of the employment office என்ற இடத்தில் மிகவும் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அதாவது இளநிலை (UG) முடித்தவர்களாக இருந்தால் district employment office அதாவது நாகை மாவட்டமாக இருந்தால் நாகப்பட்டினம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். மற்றபடி PG முடித்தவர்கள் அனைவரும் professional and executive employment branch office  என்பதை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு தாங்கள் எந்த தாலுக்கா, எந்த லொக்கேஷன் போன்று சில விவரங்களை நிரப்ப வேண்டியதாக இருக்கும்.

TN employment online registration step: 6

அதன் பிறகு NEXT என்பதை கிளிக் செய்து qualification details என்ற பகுதியில் தங்களுடைய கல்வி தகுதி விவரங்களை கொடுத்த பின்பு, ADD என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு வேறு என்ன பட்டப்படிப்பு முடித்து உள்ளிர்கள் என்பதையும் அவற்றின் விவரங்களையும், பூர்த்தி செய்து கொள்ளலாம்.

இதேபோன்று  டிப்ளோமா கோர்ஸ், டைபிங் போன்ற பயிற்சிகள் முடித்திருந்தாலும் அவற்றின் விவரங்களையும் கொடுத்த பின்பு , SAVE என்பதை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு continue என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது பிரிண்ட் அவுட் என்ற ஆப்சன் காட்டப்படும். பிரிண்ட் அவுட் என்பதை கிளிக் செய்தால் போதும் ஆன்லைனில் வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் புதியதாக பதிவு செய்யும் முறை முடிந்து விட்டது. பதிவு செய்த படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த தகவல் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பதிவை சேர் செய்யுங்கள்.