தமிழக ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு !

0
110

சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நியமன அதிகாரி, சென்னை தலைமைச் செயலக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு துணைச் செயலாளரால் நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 25.01.2021 முதல் 14.02.2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
பணியின் பெயர்அலுவலக உதவியாளர்
பணியிடங்கள்12
கடைசி தேதி14.02.2021
விண்ணப்பிக்கும் முறைOnline
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 12

அலுவலக உதவியாளர் வயது வரம்பு:

01.01.2020 அன்றுள்ளவாறு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

தமிழ்நாடு அடிப்படை பணி விதிகளுக்கான சிறப்பு விதி, விதி 5(2)(ய)ன்படி அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

TNRD சம்பளம்:

ரூ.15700 – 50000/-(Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் வழங்கப்பட உள்ளது.

TNRD தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:

https://tnrd.gov.in/ என்ற இணைய முகவரி மூலம் 14.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Apply Online