எங்களுக்கா ஆங்கிலம் தெரியாது..! சவால் விட்டு வெள்ளையர்களின் மூக்கறுத்த விவேகானந்தர்…

0
947
        ஒருமுறை விவேகானந்தர், வெள்ளையர்களோடு விருந்து ஒன்றில் கலந்துகொண்டிருந்தார். அச்சமயத்தில் அங்கு பேசிய வெள்ளையர் ஒருவர், இந்தியர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படுவதாகவும், உச்சரிப்புகளை சரியாக உபயோகப்படுத்த தெரியாமல் இருப்பதாகவும், ஆங்கிலத்தை இந்தியர்களைப் போல யாராலும் பிழையோடு பேச முடியாது எனவும் இந்தியர்களின் ஆங்கில அறிவைப் பற்றி பேசி, இந்தியர்களை மட்டம் தட்டினார். 
      அதை கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர், இந்தியர்களை மட்டம் தட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்தார். அவர் நேரடியாக ஆங்கிலேயர்களை பார்த்து, “உங்களைவிட ஆங்கிலத்தில் நாங்கள் தான் அதிகமாக புலமை பெற்று இருக்கிறோம்; நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு” என்றார். 
     “நீங்கள் சொல்வதை நிரூபிக்க முடியுமா சுவாமி..!” என்று அந்த வெள்ளைக்காரர் நக்கலுடன் கேட்டார். 
     உடனே விவேகானந்தர் ஆங்கிலேயர்களை பார்த்து, “சவாலுக்கு தயாரா..?” என்று கேட்டார். 
        “நாங்கள் தயார்” என்று வெள்ளையர்களும் ஒத்துக்கொள்ள, விவேகானந்தர் அவர்களிடம் ஒரு சவாலை விடத் தொடங்கினார். சவால் என்னவென்றால் “ஆங்கிலத்தின் ஒரு வார்த்தையை ஒரு சொற்றொடரில் தொடர்ச்சியாக மூன்று முறை அர்த்தத்தோடு பயன்படுத்த வேண்டும். அதாவது மூன்று வார்த்தைகள் தொடர்ந்து இருந்து, அந்த சொற்றொடர் நிறைவான பொருளோடு பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்றார். 
       அனைத்து வெள்ளையர்களும் விடை தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர் .உடனே விவேகானந்தர் சிரித்தபடியே “நான் சொல்கிறேன்” என்று கீழ்க்கண்ட வாக்கியத்தை சொல்லத் தொடங்கினார். 
“You can never start a sentence with ‘because’ because ‘because’ is a conjunction” 
இதைக் கேட்டதும் அங்கிருந்த அனைவரும் விவேகானந்தரின் ஆங்கிலப் புலமையை பார்த்து கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். தான் இந்தியர்களைப் பற்றி தரக்குறைவாக பேசியது தவறு என்று அந்த ஆங்கிலேயர் மன்னிப்பு கேட்க, விவேகானந்தர் கம்பீரத்தோடு சிரித்தபடியே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.