கொட்டாவி ஏன் வருகிறது தெரியுமா..?

0
1059
        ஒரே ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் உடலில் ஆக்ஸிஜன் குறையும் போதெல்லாம் கொட்டாவி ஏற்படும்… 
இரவு நேரங்களில் கொட்டாவி ஏன் வருகிறது தெரியுமா? 
       பகல் நேரங்களில் கார்பன்-டை-ஆக்சைடை உள்ளிழுத்துக் கொண்டு ஆக்சிஜனை வெளியிடும் மரங்களானது, இரவு நேரங்களில் ஆக்சிஜனை உள்ளிழுத்துக் கொண்டு கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிட ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்து, ஆக்சிஜனின் அளவு குறைகிறது. 
     இதனால் இரவு நேரங்களில் நுரையீரலுக்கு போதுமான ஆக்சிஜன் இல்லாததால் நுரையீரலிலுள்ள செல்கள் மூலமாக மூளைக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இந்த தகவலின் பேரில் மூளையானது, உதரவிதானத்தை வாயை அகல விரித்து அதிகமான காற்றை உள்ளிழுக்க செய்யுமாறு கட்டளையிடுகிறது. இதன் காரணமாக உதரவிதானம் சுருங்கி விரிந்து, வாயை திறக்க வைத்து அதிகமான காற்றினை உள்ளிழுக்க செய்யும் நிகழ்வே கொட்டாவி எனப்படுகிறது. 
பகல் நேரங்களில் கொட்டாவி ஏன் ஏற்படுகிறது தெரியுமா? 
     நாம் உள்ளிழுக்கும் ஆக்சிஜன், நாம் உண்ணும் உணவினை செரிப்பதற்கு உண்டான ஆற்றலை வழங்குகிறது. நாம் உணவினை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, உணவினை செரிப்பதற்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. 
      இதனால் நுரையீரல் அதிக காற்று வேண்டும் என்று மூளையிடம் கேட்க, மூளை உதரவிதானத்திற்கு, வாயை அகல விரித்து அதிகமான காற்றை உள்ளிழுக்க செய்யுமாறு கட்டளையிடுகிறது. இதனால்தான் நாம் மதிய நேரங்களில், அதிக உணவு எடுத்தவுடன் நமக்கு கொட்டாவி ஏற்பட காரணமாகும்..