நமக்கு ஏன் தூக்கம் வருகின்றது தெரியுமா…?

0
451
     தூக்கம் மனிதனுக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை. பகல் முழுவதும் ஓய்வின்றி உழைக்க கூடிய மனிதன் இரவு நேரத்தில் தூங்கி, அடுத்த நாள் உழைப்புக்கு தயாராகிறான். ஒரு நாள் நாம் தூங்காமல் இருந்தால் கூட, அடுத்த நாள் நம்மால் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. ஒருவேளை இந்த தூக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் மனிதர்களால் ஊக்கத்தோடு சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. 
      இந்த தூக்கம் ஏன் ஏற்படுகிறது என்று ஆய்வு காலங்காலமாக தொடர்ந்து நடந்து கொண்டு வருகின்றது. ஒவ்வொரு அறிவியலாளரும் ஒவ்வொரு கருத்தினை முன் வைக்கிறார்கள். பெரும்பாலான அறிவியலாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தை நாம் இங்கு காண்போம். 
       நம் தூக்கத்திற்கு காரணம் மரங்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ..? ஆனால் உண்மை அதுதான்.. நம் தூங்குவதற்கு முக்கிய காரணமே நம்மை சுற்றி இருக்கக்கூடிய மரங்கள்தான்.. 
      மரங்கள் பகல் நேரத்தில் கார்பன்-டை-ஆக்சைடை உட்கொண்டு ஆக்சிஜனை வெளியிடும். இரவு நேரத்தில் ஆக்சிஜனை உட்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும். நமக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால் மயக்கம் வரும் என்பது அறிவியலின் அடிப்படை உண்மை. பகல் நேரத்தில் மரங்கள் வெளியிடும் ஆக்சிஜனை உட்கொண்டு மனிதர்களால் நிம்மதியாக உலவ முடிகின்றது. அதே நேரத்தில் இரவு வேளையில் மரங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடால் நமக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு நமக்கு ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இந்த மயக்கமே அறிவியலார் தூக்கம் என்று வர்ணிக்கின்றனர். 
      இரவு நேரத்தில் பெரும்பாலான மரங்கள் கார்பன்-டை-ஆக்சைடை வெளியிட ஆரம்பிப்பதால் நமக்கு தூக்கம் வருகின்றது. பெரும்பாலான மரங்கள் அதிகாலை 4 மணிக்கு ஆக்சிஜனை வெளியிட தொடங்குவதால் நமக்கு மயக்கத்திலிருந்து விழிப்பு ஏற்படுகின்றது. இப்படித்தான் ஒவ்வொரு நாளும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நமக்கு தூக்கம் ஏற்பட்டு பின்னர் ஆக்சிஜன் கிடைக்கும்பொழுது விழிப்பும் ஏற்படுகின்றது. 
       அப்படி என்றால் மதியம் நமக்கு ஏன் தூக்கம் வருகிறது என்று நீங்கள் கேட்கலாம். நாம் உட்கொள்ளும் ஆக்ஸிஜன் ஆனது நமது உணவினை செரிக்க உதவும் ஆற்றலை வழங்குகிறது. மதிய நேரத்தில் அதிகம் உணவினை உட்கொள்ளும் பொழுது செரிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜன் இல்லாத பொழுது உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நமக்கு தூக்கம் ஏற்படுகின்றது. 
     தெளிவான ஆதாரங்கள் இல்லாத போதிலும், அவர்கள் போதுமான ஆதாரமாக காட்டுவதே கொட்டாவியை மட்டும்தான். ஏனென்றால் கொட்டாவி ஆக்சிஜன் குறைபாட்டால் ஏற்படுகின்றது. எப்படி ஏற்படுகின்றது என்பதை பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில் காண்போம்.