காந்தியடிகளுக்கு தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வத்தை தூண்டிய தமிழ் புலவர் யார் தெரியுமா?

0
343
        காந்தியடிகளுக்கு தமிழ் கற்றுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டு, தமிழ் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை. இந்த ஆர்வத்தை தூண்டிய தமிழ் புலவர் யார் தெரியுமா…? காந்தியடிகளுக்கு தமிழ் ஆர்வம் ஏற்பட தூண்டுகோலாக அமைந்த சம்பவம் என்ன தெரியுமா..? 
      1919-20களில் இந்தியா முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் நடைமுறையில் இருந்தது. அதாவது ஆங்கிலேயர்கள் தயாரித்து கொடுக்கும் எந்த பொருளையும் நாம் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதே அவ்வியக்கத்தின் நோக்கமாகும். 
    அந்த காலகட்டத்தில் காந்தியடிகள், மும்பையில் ஒத்துழையாமை இயக்கத்தை பற்றி விரிவான உரையாற்றினார். அந்தக் கூட்டத்தில் தமிழ் புலவர் ஒருவரும் கலந்து கொண்டார். 
     அந்தக் கூட்டத்தில், காந்தியடிகள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும், அங்கிருந்த ஒவ்வொருவரின் விடுதலை உணர்ச்சியையும், நாட்டுப்பற்றையும் தூண்டிக் கொண்டிருந்தது. 
      காந்தியடிகள் அந்தக் கூட்டத்தில் ஆங்கிலேயர்கள் தயாரித்து கொடுக்கும் எந்த ஒரு பொருளையும் நாம் பயன்படுத்தக் கூடாது என்று கூறினார். அதன் பின்னர், “உங்கள் கைகளில் ஏதாவது ஆங்கிலேயர்கள் தயாரிப்பு பொருட்கள் இருந்தால், அதை உடனே அந்தக் குழியில் போட்டு விடுங்கள்..” என்று கூற, அக்கூட்டத்தில் இருந்த பெரும்பாலானோர் தங்கள் கைகளில் வைத்திருந்த கைக்கடிகாரம், செருப்பு உட்பட பல பொருட்களை தீயிட்டு கொளுத்தினர். 
      அந்த நேரத்தில் நம் தமிழ் புலவர் கையில் ஒரு ஆங்கில தயாரிப்பு குடை ஒன்றினை வைத்திருந்தார். காந்தியடிகள் சொன்ன அடுத்த நிமிடத்தில் அந்த குடையினை தீக்கிரையாக்கினார் நம் தமிழ் புலவர். 
      அதன் பின்னர் நம் தமிழ்ப் புலவர் ஒரு கணம் யோசிக்க தொடங்கினார் . காந்தியடிகள் இந்த கூட்டத்தில் ஆங்கிலேய தயாரிப்பு பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறார். ஆனால் அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்..? என்று சிந்திக்கத் தொடங்கினார். 
     உடனே இதை காந்தியடிகளிடம் கேட்டுவிட வேண்டும் என்று துணிவு கொண்டு காந்திஜியிடம் பேச நோக்கியபோது அதற்கான சூழல் அங்கு அமையவில்லை. கூட்டத்தில் காந்தியடிகளை நெருங்குவதே பெரிய விஷயமாக இருந்தது. 
     அங்கிருந்து தமிழகம் வந்த நம் தமிழ்ப் புலவர், ஒரு கடிதத்தை எடுத்து காந்திக்கு கடிதம் ஒன்றை எழுத தொடங்கினார். அதில், “பெருமை மிக்க காந்தியடிகள் அவர்களே, ஒத்துழையாமை இயக்கம் பற்றி நீங்கள் அளித்த உரையில் நான் மெய்சிலிர்த்தேன்.. அதே நேரத்தில் ஆங்கிலேய தயாரிப்புகளை பயன்படுத்த கூடாது என்று கூறிவிட்டு ஆங்கிலம் பேசியதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.. இது ஞாயமாகுமா..? நீங்கள் இந்தியாவில் உள்ள ஏதேனும் ஒரு மொழியில் உரையாற்றி இருக்கலாம் ..” என்று சற்று கண்டிப்போடு எழுதினார். 
      இதைப் பார்த்த காந்தியடிகளுக்கு கோபம் பீறிட்டு வந்தது. மீண்டும் அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த முகவரிக்கு, காந்தியடிகள் பதில் கடிதம் ஒன்றினை வரைந்தார். அதில், “இவ்வளவு மொழிப்பற்று பற்றி பேசுகிறாயே ..? நீயும் இந்திய மொழிகளில் ஏதாவது ஒரு மொழியில் எனக்கு கடிதம் எழுதி இருக்கலாம் அல்லவா..! நீயும் அதை ஆங்கிலத்தில் தானே எனக்கு கடிதம் எழுதியுள்ளாய்..! இது நியாயம் ஆகுமா..?” என்று எழுதியிருந்தார். 
      இதைப் பார்த்த தமிழ் புலவர், “என் தாய் மொழியாகிய தமிழ் மட்டுமல்லாது, இந்திய மொழிகள் எதனையும் ஒருவரை திட்டுவதற்கும் பயன்படுத்தி அதன் பெருமையை சீர்குலைக்க மாட்டேன்” என்று பதில் கடிதம் எழுதினார். 
      இதைப் படித்துப் பார்த்த காந்தியடிகளுக்கு உடல் சிலிர்த்து போய் விட்டது. நான் உண்மையான ஒரு இந்தியனை இன்று நான் அடையாளம் கண்டு இருக்கிறேன். உன் மொழிப்பற்றினை பார்க்கும் பொழுது, எனக்கும் மெய் சிலிர்த்து விட்டது. அடுத்த முறை உன்னை நான் சந்திக்கும் பொழுது, உன் தாய் மொழியாகிய தமிழில் பேசுவதற்கு கற்றுக்கொண்டு உன்னிடம் நான் தமிழில் பேசுவேன் என்று எழுதினார். 
     அதன்படியே காந்தியடிகள் தமிழ் கற்றுக்கொள்ள ஒருவரை நியமித்து தமிழ் பேசவும், எழுதவும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தார். 
       காந்தியடிகளுக்கு தமிழ் பற்றினை ஏற்படுத்திய அந்த வீரத் தமிழ் புலவர் யார் தெரியுமா..? 
அவர்தான் மகாகவி பாரதியார்