1. கூற்று : சிலிகா அதிகமுள்ள அமில லாவா வேகமாகப் படிகின்றது. காரணம் : செயல்படாத எரிமலைகள் அதிக செயல்பாடு கொண்டவை. அடிக்கடி வெடித்து வெளியேற்றும் எரிமலைகள்.
2. கூற்று (A): கண்டத்தின் மேலோடு அதிக பருமனாக இருந்தபோதிலும், கண்டப்பகுதிகளின் அடர்வு கடல் மேலோட்டின் அடர்வைவிட குறைந்தே காணப்படுகிறது. விளக்கம் (R): ஏனெனில் கடல் மேலோடுகள் இலகுவான மற்றும் அடர்ந்த பாறைகளின் கலவையாகும். சரியானவற்றை தேர்ந்தெடு.
3. கூற்று : உலகின் மூன்றில் இரண்டு பங்கு எரிமலைகள் பசிபிக் கடலில் உள்ளன. காரணம் : பசிபிக் கடலின் மேற்கு மற்றும் கிழக்குக் கடற்கரைப் பகுதியை பசிபிக் நெருப்பு வளையம் என அழைக்கிறோம்.
4. உலகில் எத்தனை சதவீத நிலநடுக்கங்கள் பசுபிக் பெருங்கடலில் ஏற்படுகின்றன?
5. எந்த ஒரு இடத்தில் நிலநடுக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ அதனை எவ்வாறு அழைக்கிறோம்?
6. ___________ பகுதி ” பசிபிக் நெருப்பு வளையம்” என்று அழைக்கப்படுகிறது.
7. கூற்று: புவி மேற்பரப்பானது மலைகள், பீடமிகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற எண்ணற்ற வகையான நிலத்தோற்றங்களுடன் காணப்படுகிறது. காரணம்: புவியின் அகச் செயல்முறைகள் மற்றும் புறச்செயல்முறைகளால் இவ்வாறான நிலத்தோற்றங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன.
8. தவறான கூற்றைத் தேர்ந்தெடு.1. V வடிவ பள்ளத்தாக்கு அகன்ற படுகை உடையதாக காணப்படும். 2. துணையாறு என்பது ஒரு முதன்மை ஆற்றிலிருந்து பிரிந்து மற்றும் விலகிச் செல்லும் ஓர் ஆறு ஆகும். 3. கிளையாறு என்பது ஓர் முதன்மை ஆற்றுடன் இணையும் அல்லது ஆற்றினுள் பாயும் ஓர் நீரோடை அல்லது ஓர் ஆறு ஆகும்.
9. கூற்று : மணல் துகள்கள் எடை அதிகமாக இருக்கும் போது காற்று நீண்ட தொலைவிற்கு கடத்திச் செல்கின்றது. காரணம் : காற்று வீசுவது நிற்கும் போது மணலை ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கடத்துகின்றது.
10. உலகின் உயரமான நீர்வீழ்ச்சியான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
11. தவறான கூற்றைத் தேர்ந்தெடு. 1. வட அமெரிக்காவில் கனடா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் எல்லையில் நயாகரா நீர்வீழ்ச்சி காணப்படுகிறது. 2. ஐரோப்பாவில் ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளின் எல்லையில் விக்டோரியா நீர்வீழ்ச்சி காணப்படுகிறது.
12. கடற்கரைக்கு இணையாக கடலில் நீள்வட்ட வடிவில் படிந்துள்ள மணல் அல்லது சேறு மணல் திட்டுகள் எனப்படுகின்றன.
13. கூற்று : பல்வேறு வகையான மரபு வழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம் வகைப்படுத்தப்படுகிறது. காரணம் : மனித இனத்தை மனித உயிர்களுக்குள்ளே பல்வேறு குழுக்களாக வரையறுத்துள்ளனர்.
14. கூற்று : கேரள கடற்கரையோரத்தில் வறண்ட (அல்லது) உயர்நிலைக் குடியிருப்புகள் காணப்படுகின்றன. காரணம் : நீர் ஆதாரங்களாலும் நிலத்தோற்ற அமைப்பாலும் உயர்நிலைக் குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதில்லை.
15. கூற்று 1: காக்கசாய்டு இன மக்கள் வெள்ளை நிறத்தோலும், அடர் பழுப்பு நிறக்கண்களும், அலை போன்ற முடியும், நீளமான மூக்கும் உடையவர்களாவர். கூற்று 2: காக்கசாய்டு இன மக்கள் யூரேசியாவிலும் காணப்படுகிறார்கள்.
16. பல்வேறு வகையான மரபுவழிக் கடத்தல் மூலம் மனித உயிரினம், உயிரியல் குழுக்களாக பிரிக்கப்படுவதே _________ ஆகும்.
17. கூற்று 1: வடஇந்தியாவில் காஷ்மீர், உருது, பஞ்சாபி, இந்தி, ராஜஸ்தானி, குஜராத்தி, பெங்காலி, அஸ்ஸாமி மற்றும் பல மொழிகள் பயன்படுத்துகின்றனர். கூற்று 2: தென்னிந்தியாவில் முக்கியமான மொழிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகும்.
18. தவறான இணையைத் தேர்ந்தெடு. 1. ஜூலை 1 - உலக மக்கள்தொகை நாள் 2. பிப்ரவரி 21 - பன்னாட்டு தாய்மொழி தினம் 3. மே 21 - உலக கலாச்சார பல்வகை நாள்
19. உலகில் பாக்சைட் உற்பத்தி செய்யும் முன்னணி நாடு ___________
20. கூற்று : நிலக்கரியிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்வது வெப்ப சக்தி என அழைக்கப்படுகிறது. காரணம் : கார்பன் அளவினைக் கொண்டு நிலக்கரியினை 4 வகையாக பிரிக்கலாம்.
21. கீழ்க்கண்டவற்றுள் இயற்கை வளங்களின் முக்கியத்துவம் எது/ எவை?
22. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?
23. புவியின் மேலோட்டில் பரந்த அளவில் காணப்படும் உலோகங்களுள் இரும்பானது எத்தனைஆவது உலோகமாகும்?
24. உலக அளவில் எத்தனை சதவீதத்திற்கும் அதிமான இயற்கை வாயு இருப்புகள் அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, ஈரான் மற்றும் கத்தாரில் உள்ளது?
25. சுற்றுலாப் பயணி என்ற சொல் _____________ என்ற பழமையான ஆங்கிலச் சொல்லிலிருந்து தோன்றியது.
26. கூற்று : ஆந்திராவிலுள்ள உயரமான நீர்வீழ்ச்சி தலக்கோணம் நீர்வீழ்ச்சி காரணம் : இந்நீர்வீழ்ச்சியில் மருத்துவ குணம் நிறைந்த மூலிகைச் செடி கொடிகளில் இருந்து நீர் விழுவது சிறப்பு அம்சமாகும்.
27. கூற்று : கோவாவிலுள்ள புகழ்பெற்ற கடற்கரைகளுள் ஒன்றான கலங்கட், சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பாகும். காரணம் : வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் கலங்கட் கடற்கரைக்குக் குவிகின்றார்கள்
28. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிடவும், அவற்றின் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களைப் பற்றி அறியவும் பயன்படும் சுற்றுலா எது?
29. அழகு கொட்டிக்கிடக்கும் மலைச்சரிவுகள், ஆழ்பள்ளத்தாக்குகள், பனிபடர்ந்த மலைகள், அடர்ந்த காட்டிலுள்ள பசுமையான புல்வெளி கம்பளங்கள் போன்ற அமைப்புகளை ஒருங்கே பெற்ற நாடு எது?
31. கூற்று (A) : வட அமெரிக்காவின் தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பருத்தி நன்றாக வளருகிறது. காரணம் (R) : மழையுடன் கூடிய வெப்பமான கோடைகாலம் மற்றும் வளமான மண் ஆகியவை பருத்தி விளைவதற்கான ஏற்ற சூழல்களாக உள்ளன.
32. வட அமெரிக்கக் கண்டத்தின் மிக ஆழமான பகுதி …………………….
33. தென் அமெரிக்காவின் பெரும்பான்மையான ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்கள் …………………. மூலமே கொண்டு செல்லப்படுகின்றன.
34. உலகில் இரண்டாவதாக அதிகப்படியான இரும்புத்தாது இருப்பைக் கொண்டுள்ள நாடு …………………
35. கூற்று (A) : வட அமெரிக்கா 1492 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் கொலம்பஸால் கண்டுபிடிக்கப்பட்டது. காரணம் (R) : 1507 ஆம் ஆண்டு இத்தாலிய ஆய்வுப்பணி அமெரிக்கோ வெஸ்புகி இந்நிலப்பகுதிக்கு வந்ததை அடுத்து “அமெரிக்கா” எனப் பெயரிடப்பட்டது.
36. கூற்று (A) : மத்திய அமெரிக்காவுடன் இணைந்து, தென் அமெரிக்கா லத்தீன் அமெரிக்கா என அழைக்கப்படுகிறது. காரணம் (R) : குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு (லத்தீன்மொழி பேசுபவர்கள்) அவர்களின் காலனியாக ஆட்சிசெய்யப்பட்டது.
37. i. நிலவரைபட நூல் என்பது பல வகைப்பட்ட நிலவரைபடங்கள் கட்டமைக்கப்பட்ட நகர் தொகுதி ஆகும். ii. நிலவரைபட நூலின் வரைபடங்கள் சிறிய அளவையில் வரையப்படுகின்றன. iii. முக்கியமற்ற விவரங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
38. கூற்று 1 : உலக உருண்டை என்பது புவியின் முப்பரிமாண மாதிரி. கூற்று 2 : இதனை இது கையாள்வதற்கும், எடுத்துச் செல்வதற்கும் எளிது. சுருட்டியோ அல்லது மடித்தோ கையில் எடுத்துச் செல்வதற்கும் எளிது.
39. நிலவரைபடத்தின் தேவையான அடிப்படைக்கூறு …………………
40. i) நிலவரைபடங்கள் நமக்கு அதிக விவரங்களைக் கொடுக்கக்கூடியது. ii) ஒவ்வொரு நிலவரைபடத்திற்கும் குறிப்பு உண்டு. iii) நிலவரைபடங்கள் வானிலை முன்னறிவிப்பிற்கு பயன்படுகிறது.
41. கூற்று 1: நிலவரைபடங்கள் வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை படங்களாகக் காட்டுகின்றன. கூற்று 2 : நிலவரைபடங்கள் இராணுவத்தினருக்கு முக்கியமல்ல
42. கூற்று (A) : நவீன உலகத்தில் அனுதினமும் மகிழ்ச்சியாக வாழ முடியாது காரணம் (R) : மாசடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் காரணமாக இயற்கை இடர் மற்றும் பேரிடரை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
43. கூற்று (A) : திடீர் நுகர்வு அல்லது பூமியின் மேலேட்டில் ஏற்படும் நடுக்கம் புவி அதிர்ச்சி ஆகும். காரணம் (R) : டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, ஜனநெருக்கடி, பிளவு போன்றவை புவி அதிர்ச்சிக்கு வித்திடுகின்றன
44. மனித வாழ்வில் பெரிய அளவில் சொத்துக்கள் மற்றும் மனித உயிர்கள் பரவலாக பாதிக்கப்படும்போது அவை__________ என்று அழைக்கப்படுகின்றன.
45. கூற்று 1: இடர் என்பது மனித செயல்பாடு அல்லது வாழ்க்கையில் இழப்பை ஏற்படுத்தும் நிலை, காயம், பொருட்சேதம், சொத்துக்கள் சேதமடைதல், வேலையிழப்பு, சுகாதார பாதிப்புகள், வாழ்வாதார இழப்பு, சமூக, பொருளாதார இடையூறு மற்றும் சுற்றுச்சூழல் சேதம் போன்றவையாகும். கூற்று 2: பொதுவாக இடர் என்பது ஒரு ஆபத்தான நிகழ்வு ஆகும்.
46. கூற்று 1: சூறாவளி (ஹரிக்கேன்) என்பது கடலில் உருவாகும் ஒரு இயற்கை இடர் ஆகும். கூற்று 2: சூறாவளி நிலத்தை வந்து அடையும்பொழுது கட்டடங்களையும் உயிர்களையும் சேதப்படுத்துவதால் இதை பேரிடர் என அழைக்கின்றனர்.
47. தொழில்நுட்ப, போக்குவரத்து பேரழிவுகள், கட்டமைப்பு சரிவு மற்றும் உற்பத்தி வீழ்ச்சிகள் போன்ற பேரிடர்கள் கீழ்க்கண்ட எந்த ஆதார வகையை சார்ந்தவை?
48. 2018 மே 2 மற்றும் 3 தேதியில் அதிக திசைவேகத்துடன் வீசிய புழுதி புயலால் வடஇந்தியாவில் ஏற்பட்ட பாதிப்புகள் எவை? 1. உத்திரப்பிரதேசத்தில் 43 பேர் இறந்தனர் 2. இராஜஸ்தானில் 35 பேர் இறந்தனர் 3. 200க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர் 4. 8000 மின்கம்பங்கள் கீழே சாய்ந்தது
49. தமிழகம், புதுச்சேரியில் உள்ள கடலோர பகுதிகளான வேதாரண்யம் மற்றும் நாகப்பட்டினத்தை சுற்றிலும் கஜா புயல் எப்போது ஏற்பட்டது?
50. கூற்று 1: தீ விபத்து என்பது ஒரு பேரிடர் ஆகும். கூற்று 2: தீ விபத்து என்பது குறுகிய மின் சுற்று, வேதியியல் தொழிற்சாலை, தீப்பெட்டி, மற்றும் வெடி தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்தினை குறிக்கும்.