மீண்டும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு| lockdown Extended in TN

0
337

தமிழகத்தில், சில தளர்வுகளுடன் ஜூன் 7 முதல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ஏற்கனவே ஜூன் 7 வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஊரடங்கு ஜூன் 7 முதல் ஜூன் 14 காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கோவை, நீலகிரி,திருப்பூர், ஈரோடு,சேலம்,கரூர், நாமக்கல் தஞ்சாவூர் , திருவாரூர் , நாகப்பட்டிண மயிலாடுதுறை, ஆகிய 11 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் இருப்பதை தொடர்ந்து அங்கு மட்டும் அத்தியாவசிய பொருளுக்கு மட்டுமே தளர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படுள்ளன. இனி காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், நடை பாதை கடைகள், ஹார்டுவேர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் இயங்கலாம்.

முழு விபரங்களுக்கு கீழே டவுன்லோட் லிங்கில் சென்று pdf-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.