கரோனா சிகிச்சை உதவியாளர்‌ பணியில்‌ சேர பயிற்சி 10ஆம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌

0
188

கரோனா சிகிச்சை உதவியாளர்‌ பணியில்‌ சேர பயிற்சி….
10ஆம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌

கரோனா சிகி‌ச்சைக்கான உதவியாளர்‌ மற்றும்‌ ரத்தபரிசோதகர்‌ பணிகளுக்கான ஒரு மாதஇலவச பயிற்சிக்கு 10 ஆம்‌ வகுப்பு படித்தவர்கள்‌ விண்ணப்பிக்கலாம்‌.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட
திறன்மேம்பாட்டு பயிற்சி பிரிவு உதவி
இயக்குநர்‌ ரமேஷ்குமார்‌ வியாழக்கிழமை கூறியதாவது:

மாநில திறன்மேம்பாட்டுக்கழகம்‌
சார்பில்‌ கரோனா சிகிச்சை தொடர்‌பான வேலைவாய்ப்புடன்‌ கூடிய
திறன்‌ பயிற்சி இலவசமாக வழங்கப்‌
படவுள்ளது. ஒரு மாத பயிற்சியாக
அவசர மருத்துவ சிகிச்சை, பொது
மருத்துவ சிகிச்சை உதவியாளர்‌, அவசர சிகிச்சைப்‌ பிரிவு உதவியாளர்‌,
வீட்டிலிருப்போருக்கு உதவும்‌ சிகிச்‌சையாளர்‌, மருத்துவ சாதன பராமரிப்பாளர்‌, ரத்தப்‌ பரிசோதகர்‌ ஆகிய
வேலைகளுக்கான பயிற்சிகள்‌ அளிக்‌கப்படவுள்ளன.

பயிற்சியில்‌ சேருவதற்கு எட்டு அல்‌லது பத்தாம்‌ வகுப்பு முடித்திருக்க
வேண்டும்‌. பதினெட்டு வயதை பூர்த்‌தி செய்திருப்பதும்‌ அவசியம்‌.

தனியார்‌ மருத்துவமனை மற்றும்‌ பரிசோதனை மையங்கள்‌ மூலம்‌ 20 இடங்களில்‌ பயிற்சி அளிக்கப்படும்‌.

பயிற்சிக்கான கட்டணத்தை சம்பந்‌தப்பட்ட மருத்துவமனை மற்றும்‌ ரத்‌தம்‌ உள்ளிட்ட பரிசோதனை மையங்‌களுக்கு அரசே செலுத்திவிடும்‌.

ஒரு மாத பயிற்சி முடித்தவர்களுக்கு
தனியார்‌ மற்றும்‌ அரசு மருத்துவமனைகள்‌, ஆரம்ப சுகாதார மையங்‌கள்‌, ரத்தம்‌ உள்ளிட்ட பரிசோதனை
மையங்களில்‌ வேலைவாய்ப்புகள்‌
வழங்க நடவடி க்கை எடுக்கப்படும்‌.

பயிற்சிகளில்‌ சேர விரும்புவோர்‌

தங்களது பெயர்‌, கல்வித்தகுதி,
தொலைபேசி எண்கள்‌ மற்றும்‌ மின்‌னஞ்சல்‌ முகவரிகளுடன்‌ ராமநாதபுரம்‌ பயிற்சி எனும்‌ மின்னஞ்சலில்‌ விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம்‌.

பயிற்சி குறித்த கூடுதல்‌ விவரங்‌களுக்கு 9788460862, 9486818233 மற்‌றும்‌ 7010029723 ஆகிய செல்பேசி எண்களிலும்‌, 04567-231075
என்ற தொலைபேசி எண்களிலும்‌
தொடர்புகொண்டு விவரங்களைப்‌
பெறலாம்‌ என்றார்‌.