1. .......... என்பது தயாரிப்பவரால் நிர்ணயிக்கப்படுகிறது. எந்த ஒரு பொருளும் இந்த விலைக்கு மேலாக விற்பனை செய்ய கூடாது.
2. ஒரு மேசை ஆனது ரூபாய். 4500 இக்கு வாங்கப்பட்டு ரூபாய்.4800 இக்கு விற்கப்படுகிறது எனில் லாபம் அல்லது நட்டம் காண்க.
3. ஒருவர் ரூபாய் 300 க்கு 75 மாம்பழங்கள் வாங்கி 50 மாம்பழங்களை ரூபாய் 300 இக்கு விற்பனை செய்தார். அனைத்து மாம்பழங்களும் விற்பனையான பின் அவரது லாபம் அல்லது நட்டம் காண்க.
4. ராமு ஊர் வந்து வண்டியை மற்றொருவரிடம் இருந்த ரூபாய் 28000 இக்கு வாங்கி அதனை பழுது பார்க்க ரூபாய் 2000 செலவு செய்தார். பிறகு அதனை ரூபாய் 30000 இக்கு விற்பனை செய்தார் எனில் அவருடைய லாபம் அல்லது நட்டம் காண்க.
5. நிறைமதி தன்னுடைய முத்துமாலையை ரூபாய் 30000 இக்கு விற்பனை செய்து அதனால் லாபம் 5000 பெறுகிறார் எனில் விற்பனை விலையை காண்க.
6. ஒருவர் ஒரு நாற்காலியை ரூபாய் 1500 இக்கு வாங்கினார். தள்ளுபடி ரூபாய் 100 அளித்த பின் ரூபாய் 250 லாபம் பெறுமாறு விற்பனை செய்ய விரும்பினார் எனில் நாற்காலியின் குறித்த விலை எவ்வளவு?
7. சரவணன் 24 முட்டைகளை ரூபாய் 96 இக்கு வாங்கினார். அவற்றில் 4 முட்டைகள் உடைந்து விட்டன. மீதியை விற்பனை செய்ததில் ரூபாய் 36 நட்டம் எனில் ஒரு முட்டை காண விற்பனை விலை என்ன?
8. ஒரு விற்பனையாளர் மூன்று பொருள்களை ரூபாய் 425, ரூபாய் 550, ரூபாய் 610 என வாங்குகிறார். அவற்றை முறையே ரூபாய் 450, ரூபாய் 525, ரூபாய் 625 எனது விற்பனை செய்கிறார். அவருடைய மொத்த லாபம் அல்லது நட்டம் காண்க.
9. ஓவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ரூபாய் 60,000 க்கு வாங்கி ஒரு மீட்டர் ரூபாய் 400 விதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய லாபம் அல்லது நட்டம் காண்க.
10. ஒரு விற்பனை நிலையம் ஒரு டஜன் பேனாக்களை ரூபாய் 216 இக்கு வாங்கியது மேலும் சில்லறை செலவாக ரூபாய் 58 செலவு செய்தது. பின்பு ஒரு பேனாவிற்கு ரூபாய் இரண்டு குறைத்து விற்பனை செய்ததில் லாபம் ரூபாய் 50 கிடைத்தது எனில் ஒரு பேனாவின் குறித்த விலை எவ்வளவு?
11. ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்களும் வெவ்வேறானவை எனில் அது............. ஆகும்.
12. ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல்........
13. பின்வரும் பக்க அளவுகளை கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? 6.2cm, 1.3cm,3.5cm
14. பின்வரும் கோண அளவுகளைக் கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? 60⁰, 40⁰ 42⁰
15. பின்வரும் பக்க அளவுகளை கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? 9cm, 4cm, 5cm
16. பின்வரும் கோண அளவுகளை கொண்டு முக்கோணம் அமைக்க இயலுமா? 60⁰, 90⁰,90⁰
17. ஒரு முக்கோணத்தின் இரு முக்கோணங்கள் முறையே 52⁰, 68⁰ எனில் மூன்றாவது கோணம் காண்க.
18. சமபக்க முக்கோணம் ஆனது ஒரு........... ஆகும்.
19. பின்வருவனவற்றுள் சரியான கூற்று எது? 1. ஒவ்வொரு சமபக்க முக்கோணம் ஓர் இருசமபக்க முக்கோணம் ஆகும். 2. ஒவ்வொரு இருசமபக்க முக்கோணம் ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.
20. பின்வருவனவற்றுள் எவை இருசமபக்க முக்கோணத்தின் பக்கங்கள் ஆக அமையும்?
21. முழு எண் மற்றும் தகு பின்னத்தின் கூடுதல்....... எனப்படும்.
22. ........... என்ற எண்ணிற்கு அந்த எண்ணே தலைகீழாக அமையும்.
23. சுருக்குக: 1 3/5 + 5 4/7 = ......
24. சுருக்குக : 7 2/7 - 3 4/21 = .............
25. கௌரி 3 1/2kg தக்காளியையும் 3/4 kg கத்தரிக்காயையும் 1 1/4 வெங்காயத்தையும் வாங்கினார். அவர் வாங்கிய காய்கறிகளின் மொத்த எடை எவ்வளவு?
26. 15 3/4 m நீளமுள்ள திரைச்சீலையை ரவி வாங்கினார். அவர் அதை ஒவ்வொன்றும் 2 1/4m நீளமுள்ள திரைச்சீலைகள் ஆக வெட்டினால் அவருக்கு எத்தனை சிறிய திரைச்சீலைகள் கிடைக்கும்?
27. 3/7 மற்றும் 2/9 க்கும் இடையே உள்ள வேறுபாடு........
28. மங்கை 6 3/4 kg எடையுள்ள ஆப்பிள்கள் வாங்கினார். கலை, மங்கை வாங்கியது போல் 1 1/2 மடங்கு ஆப்பிள்களை வாங்கினார் எனில் கலை எவ்வளவு கிலோ ஆப்பிள்களை வாங்கினார்?
29. 1 1/3 இக்கும் 3 1/6 இக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் 4 1/6 இக்கும் 2 1/3 இக்கும் இடையே உள்ள வேறுபாட்டையும் கூட்டுக.
30. இரண்டு பின்னங்களின் கூட்டல் 5 3/9 அவற்றில் ஒரு பின்னம் 2 3/4 எனில் மற்றொரு பின்னம் காண்க.
31. முயல் தனது உணவை எடுக்க 26 1/4 m தூரத்தை கடக்க வேண்டும். ஒரு தாவழுக்கு 1 3/4 m தூரத்தை கடக்கும் ஆனால் தனது உணவை எடுக்க எத்தனை முறை தாவ வேண்டும்?
32. -5 முதல் 6 வரையிலான எண்களில்........... மிகை முழுக்கள் உள்ளன.
33. எந்த ஓர் எண்ணின் நிலையையும் அதன் எதிர் எண்ணையும் தீர்மானிக்கும் எண்.........
34. ஒரு செவ்வக வடிவிலான புகைப்படம் ஒன்றின் பரப்பளவு 220cm² மற்றும் அகலம் 20cm எனில் அதன் நீளம் என்ன?
35. ஒரு சதுர வடிவ பூங்காவின் சுற்றளவு 40m எனில் பூங்காவின் ஒரு பக்கத்தின் அளவு என்ன?
36. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காகும் போது அதனுடைய பரப்பளவு......... மடங்காகும்.
37. ஒரு சதுரத்தின் பக்கம் 10cm. அதனுடைய பக்கம் மூன்று மடங்காகும் போது சுற்றளவு எத்தனை மடங்காக அதிகரிக்கும்.
38. 40cm பக்க அளவுள்ள ஒரு சமபக்க முக்கோணத்தின் ஒரு முனையில் இருந்து 6cm பக்கமுள்ள ஒரு சமபக்க முக்கோணம் நீக்கப்படுகிறது எனில் மீதமுள்ள பகுதியின் சுற்றளவு என்ன?
39. ஒரு செவ்வக வடிவ பூங்காவின் நீளம் அகலத்தை விட 14cm அதிகமாக உள்ளது. அப் பூங்காவின் சுற்றளவு 200m எனில் அதன் நீளம் என்ன?
40. ஒரு சதுரத்தின் பக்கத்தை நான்கில் ஒரு பங்காக குறைத்தால் உருவாகும் புதிய சதுரத்தின் பரப்பளவு என்ன மாற்றம் ஏற்படும்?
41. ஒரு சாய்சதுரம்........... சமச்சீர் கோடுகள் பெற்றிருக்கும்.
42. 818 இன் சுழல் சமச்சீர் வரிசை...........
43. n பக்கங்கள் கொண்ட ஓர் ஒழுங்கு பலகோணம்.......... சமச்சீர் கோடுகளையும் மற்றும் .......... சுழல் சமச்சீர் வரிசையை பெற்றிருக்கும்.
44. 77,69,61,53.......... மூன்று எண்கள்?
45. 1 முதல் 50 வரை உள்ள எண்களில் 2 ஆலும் மற்றும் 7 ஆலும் பகு படாத எண்கள் எத்தனை?
46. 25 மற்றும் 40 இக்கும் இடைப்பட்ட பகா எண்கள் எத்தனை?
47. 50 இக்குள் உள்ள சதுர எண்கள் எத்தனை?
48.கொடுக்கப்பட்டுள்ள பக்கங்களின் அடிப்படையில் முக்கோணத்தை வகைப்படுத்துக.
49. கோணங்களின் அடிப்படையில் எவ்வகை முக்கோணம் என்பதனை எழுதுக.
50.கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவத்தின் சுற்றளவு என்ன?