பொது அறிவியல் முக்கிய வினாக்கள்

0
656

வேதியியல்

  1. தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்
  2. இதுவரையில் கண்டறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை – 118
  3. புவியில் மிக அதிகளவில் உள்ள தனிமம் – ஆக்ஸிஜன்
  4. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள உலோகம் – மெர்குரி
  5. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் – புரோமின்
  6. அண்டம் மற்றும் விண்மீன்களில் உள்ள முக்கியமான தனிமங்கள் – ஹைட்ரஜன், ஹீலியம்
  7. அதிக உருகுநிலை கொண்ட உலோகம் – டங்ஸ்டன்
  8. முதன்முதலில் தனிமங்களை உலோகங்கள் மற்றும் அலோகங்கள் என வகைப்படுத்தியவர் – லவாய்சியர்
  9. இரும்பை கால்வனைசிங் செய்ய பயன்படும் உலோகம் – சிங்க்
  10. சோடியம் குளோரைடு, கால்சியம் குளோரைடு, மெக்னீசியம் குளோரைடு போன்றவை எதற்கான உதாரணம் – அயனிச் சேர்மங்கள்
  11. அயனிச் சேர்மங்களின் பொதுவான குணம் ஒன்று – நீரில் எளிதில் கரையும்
  12. பெரும்பாலான சகபிணைப்புச் சேர்மங்கள் எந்நிலையில் இருக்கின்றன – வாயுக்களாகவோ, திரவங்களாகவோ உள்ளன.
  13. சகபிணைப்புச் சேர்மங்கள் எதில் நன்கு கரையும் – பென்சீன், கார்பன் டெட்ரா குளோரைடு, ஈதர்.
  14. சோப்பு தயாரிக்கும் தொழிலில் அதிகம் பயன்படும் சேர்மம் எது – சோடியம் ஹைட்ராக்ஸைடு

14, தனித்த நிலையிலும் சேர்மங்களாக உள்ள அலோகங்கள் – நைட்ரஜன், ஹைட்ரஜன், கார்பன் மற்றும் சல்பர்.

  1. அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள்
  2. அசிடஸ் என்ற இலத்தீன் மொழிச்சொல்லின் பொருள் – அமிலம்
  3. தாவரங்களிலிருந்தும் விலங்குகளிலிருந்தும் பெறப்படும் அமிலங்கள் – எனப்படும். – கரிம அமிலங்கள்
  4. தாது பொருள்களிலிருந்து பெறப்படும் அமிலங்கள் — எனப்படும். – கனிம அமிலங்கள்
  5. அமிலங்கள் நீரில் கரைக்கப்படும் போது —- அயனிகளைக் கொடுக்கிறது ‘ ஹைட்ரஜன்
  6. காரங்கள் நீருடன் சேரும்போது —- அயனிகளைக் கொடுக்கிறது. ‘ ஹைட்ராக்ஸைடு
  7. நீரில் கரையும் காரங்களுக்கு ——- என்று பெயர் – அல்கலிஸ்
  8. வேதிப்பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுவது – கந்தக அமிலம்
  9. உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் எது – .புளுரோ சல்பியூரிக் அமிலம் (HFSO3)
  10. அமில நீக்கி எனப்படுவது – மெக்னீசியம் ஹைட்ராக்ஸைடு
  11. நீல லிட்மஸை சிவப்பாக மாற்றுவது – அமிலம்
  12. சிவப்பு லிட்மஸை நீல நிறமாக மாற்றுவது – காரம்
  13. எறும்பு கடிக்கும்போது, நம் உடம்பினுள் செலுத்தப்படுவது – பார்மிக் அமிலம்
  14. பெர்ரஸ் சல்பேட் உப்பின் நிறம் – இளம் பச்சை
  15. முகரும் உப்பு (Smelling salts) என்பது – அம்மோனியம் கார்பனேட்
  16. பொதுவாக ஒரு அமிலமும் காரமும் நடுநிலையாக்கல் வினையில் ஈடுபடும்போது உருவாகும் அயனிச் சேர்மங்கள் – உப்பு

வேதியியல்

  1. ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆக்ஸிஜன் ஒடுக்கம்
  2. ஒரு வேதிவினையில் ஆக்ஸிஜன் சேர்க்கப்படுதலோ ஹைட்ரஜன் நீக்கப்படுதலோ எலக்ட்ரான்கள் நீக்கப்படுதலோ நிகழும்போது அந்த வினை —- எனப்படுகிறது. ‘ ஆக்ஸிஜனேற்றம்

32 அமிலமேற்றப்பட்ட பொட்டாசியம் டைகுரோமேட் சிறந்த — ஆகும் – ஆக்ஸிஜனேற்றி

  1. ஒரு தனிமம் எலக்ட்ரானைப் பெறுமாயின் அது – எதிர்மறை ஆக்சிஜனேற்றம்
  2. வேதிவினைகளில் எலக்ட்ரான்களை இழக்கும் பொருட்கள் —- ஆகும் – ஒடுக்கும் பொருட்கள் அல்லது ஒடுக்கிகள்
  3. ஆக்சிஜனை சேர்த்தல் அல்லது ஹைட்ரஜனை நீக்கல் – ஆக்சிஜனேற்றம்
  4. ஹைட்ரஜனை சேர்த்தல் அல்லது ஆக்சிஜனை நீக்கல் – ஒடுக்கம்
  5. ஒரு மூலக்கூறில், பிற எல்லா அணுக்களும் அயனிகளாக வெளியேறிய பின் அணுவின் மீதுள்ள எஞ்சிய மின்னூட்டமே தனிமத்தின் — ஆகும். ஆக்சிஜனேற்ற எண்
  6. எல்லா சேர்மங்களிலும் : ப்ளோரினின் ஆக்சிஜனேற்ற எண் – -1
  7. பொதுவாக எல்லா சேர்மங்களிலும், ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் – +1
  8. Cr20-யில் காணும் குரோமியத்தின் ஆக்சிஜனேற்ற எண் – +6
  9. ஒரு வேதிவினையில் ஒரு தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் அதிகரிப்பது – ஆக்ஸிஜனேற்றம்
  10. ஒரு வேதிவினையில் ஒரு தனிமத்தின் ஆக்சிஜனேற்ற எண் குறைவது – ஆக்ஸிஜன் ஒடுக்கம்
  11. REDOX என்பதன் விளக்கம் – ஆக்சிசனேற்ற மற்றும் ஒடுக்கம் (Oxidation – Reduction)
  12. H2O2, BaOz, NapO2 போன்ற பெர்ஆக்சைடுகளில் ஆக்சிஜனின் ஆக்சிஜனேற்ற
    எண் – -1
  13. உலோக ஹைட்ரைடுகளில் ஹைட்ரஜனின் ஆக்சிஜனேற்ற எண் – -1

. தாதுக்கள் மற்றும் உலோகங்கள்

  1. எந்த ஒரு குறிப்பிட்ட கனிமத்தில் இருந்து சேர்மநிலையில் உலோகம், எளிதாக லாபகரமான முறையில், பெருமளவு பிரித்தெடுக்க முடிந்தால் அந்த கனிமம் — எனப்படும். – தாது

47.மாக்னசைட், டாலமைட், கார்னலைட், எப்சம் உப்பு போன்றவை எதன் தாதுக்கள் – மக்னீசியம்

48.. மேக்னடைட் ஹேமடைட், சிட்ரைட், லிமோடைட், இரும்பு கந்தகக்கல் ஆகியன எதன் தாதுக்கள் – இரும்பு

49.மிகவும் லேசான உலோகம் — ஆகும் – லித்தியம்

  1. மிகவும் கனமான உலோகம் எது – ஆஸ்மியம்
  2. X கதிர்கள் ஊடுருவாத உலோகம் — ஆகும் – காரியம்
  3. தாவரங்களின் பச்சையத்தில் காணப்படும் உலோகம் – மெக்னீசியம்