TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION-2026

0
3014

TET FOR WORKING TEACHERS ONLINE APPLICATION-2026


*TET for working teachers Online Application portal is LIVE on 18.02.2026 at 5.00 a.m. via TRB’s official website successfully.*
APPLICATION LINK: CLICK HERE

*எப்படி விண்ணப்பிப்பது?*

*2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை
http://www.trb.tn.gov.in என்ற இணைய முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.*


*விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? எப்படி செலுத்த வேண்டும்?*

*SC, SCA, ST & மாற்றுத்திறனாளி எனில் ரூ.300/-*

*மற்றவர்களுக்கு ரூ.600/-*

*NET BANKING / CREDIT CARD  / DEBIT CARD  பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.*


*ONLONLINE ல்  விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?*

*1. MOBILE NO:*

*2. E-mail ID..*

*3. PASSPORT SIZE COLOUR PHOTOGRAPH [Jpg/Jpeg/Png : 40-60 KB].*

*4. SIGNATURE  [Jpg/Jpeg/Png : 20-40 KB].*

*5. TRB வெளியிட்டுள்ள  SERVICE CERTIFICATE  DEO / CEO  COUNTER SIGNED   உடன் [Pdf : 250-300 KB]..*

*6.  COMMUNITY CERTIFICATE   [Pdf : 250-300 KB].*

*7. S.S.L.C. MARK SHEET  [Pdf : 250-300 KB]*

*8. H.Sc. MARK SHEET  [Pdf : 250-300 KB].*

*9. D.T.Ed. DIPLOMA CERTIFICATE  [Pdf : 250-300 KB].*

*தாள் – 2 எனில்…*

*9. U.G  CONSOLIDATED  / All  SEMESTERS MARK SHEETS  and  DEGREE  /  PROVISIONAL  CERTIFICATE [Pdf : 250-300 KB]*

*10. B.Ed. CONSOLIDATED  / All  SEMESTERS MARKSHEETS  [Pdf : 250-300 KB].*

*மாற்றுத்திறனாளி எனில்*

*DISABLED CERTIFICATE    [Pdf : 250-300 KB]*

*[அசல் சான்றிதழ்களைத்தான் Scan செய்து தனித்தனி Pdfஆக பதிவேற்ற வேண்டும். Xerox & Attested வேலை இல்லை.]*


*விண்ணப்பத்தில் பிழை இருந்தால் என்ன செய்வது?*

*2026 ஏப்ரல் 11, 12 & 13 தேதிகளில் தேவையான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.*


*எப்போது – எங்கே – எப்படி தேர்வு எழுத வேண்டும்?*

*தேர்வு மையத்தை TRB முடிவு செய்து  HALL TICKETல்  குறிப்பிட்டு ONLINE ல் வெளியிடும். 2026 ஜூலை 4 & 5 தேதிகளில் தேர்வு நடத்த TRB உத்தேசித்துள்ளது. இத்தேதி உறுதியானால் அதற்கு முன்னதாக HALL TICKET  வெளியாகும்.*

*OMR SHSHEET ல் விடைகளை நிரப்பி அளிக்கும் படியாக 150 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகையில் 150 வினாக்களுடன் தமிழ் & ஆங்கில வழியில் தேர்வு நடைபெறும். தேர்வு மொழியை விண்ணப்பத்திலேயே நாம் முடிவு செய்து அளிக்கலாம்.*


*TNTET தாள்-1ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

*1. 6-11 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்*

*2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்*

*3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்*

*4. கணக்கு : 30 மதிப்பெண்*

*5. சூழ்நிலையியல் : 30 மதிப்பெண்*

*(5ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் பத்தாம் வகுப்பு வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)*


*TNTET தாள்-2ற்கான பாட வாரியான மதிப்பெண்கள் என்னென்ன?*

*1. 11-14 வயதிற்கான குழந்தை உளவியல் & கற்பித்தல் முறை : 30 மதிப்பெண்*

*2. மொழிப்பாடம் : 30 மதிப்பெண்*

*3. ஆங்கிலம் : 30 மதிப்பெண்*

*4. Maths / Science பட்டதாரிகளுக்கு, கணக்கு & அறிவியல் : 60 மதிப்பெண்*

*5. History பட்டதாரிகளுக்கு, சமூகவியல் : 60 மதிப்பெண்*

*6. மற்ற பாட பட்டதாரிகள் மேலேயுள்ள 4 / 5ல் ஒன்றை சுய விருப்பத்தின் பேரில் தேர்வு செய்துகொள்ளலாம்.*

*(6 – 8 ஆம் வகுப்பு வரையிலான பாடங்களில் வினாக்கள் அமையும் என்றாலும் +2 வரை கேட்கப்படவும் வாய்ப்புண்டு)*

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

ஆசிரியர்களின் கவனத்திற்கு: TNTET 2026 பணிச் சான்றிதழ் [ANNEXURE-I] நிரப்புவது எப்படி?

படிவத்தை நிரப்பும் முறை [HOW TO FILL]:

NAME OF TEACHER : உங்கள் பெயரை ஆங்கில பெரிய எழுத்துக்களில் [CAPITAL LETTARS ] எழுதவும்.

DOB and AGE: உங்கள் பிறந்த தேதி மற்றும் தற்போதைய வயது.

NAME OF THE POST HELD NOW: தற்போது நீங்கள் வகிக்கும் பதவி [எ.கா: BT Assistant – Maths].

DATE OF JOINING IN THE PRESENT POST : தற்போதுள்ள பதவியில் சேர்ந்த தேதி.

DATE OF INITIAL APPOINTMENT: முதன்முதலில் ஆசிரியப் பணியில் சேர்ந்த தேதி.

NAME OF THE POST DURING INITIAL APPOINTMENT: முதலில் பணியில் சேரும்போது இருந்த பதவி.

DATE OF REGULARIZATION: பணி வரன்முறை செய்யப்பட்ட தேதி.

WORKING DEPARTMENT : நீங்கள் பணிபுரியும் துறை [எ.கா: School Education Dept / Aided).

WORKING IN Govt/Aided/Private: அரசு / உதவி பெறும் / தனியார் பள்ளி – இதில் பொருத்தமானதைக் குறிப்பிடவும்.

FULL TIME / CONSOLIDATED / PART TIME : காலமுறை ஊதியம் TIME SCALE எனில் FULL TIME எனக் குறிப்பிடவும்.

NAME OF THE SCHOOL with ADDRESS: பள்ளியின் பெயர் மற்றும் முழு முகவரி.

WORKING DISTRICT : பணிபுரியும் மாவட்டம்.
SCHOOL UDISE CODE: பள்ளியின் 11 இலக்க யுடைஸ் குறியீடு.

QUALIFICATION : உங்கள் கல்வித்தகுதிகள் [D.T.Ed / B.Ed மற்றும் பாடம்.]

TEACHER EMIS ID NO: உங்கள் 8 இலக்க EMIS அடையாள எண்.

IFHRMS EMPLOYEE ID: அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான IFHRMS எண்

கையொப்பம்: இடதுபுறம் நீங்கள் கையெழுத்திட வேண்டும்.
வலதுபுறம் உங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் (HM) அல்லது முதல்வர் [PRINCIPAL] கையொப்பம் மற்றும் முத்திரை பெற வேண்டும். இறுதியில் மாவட்டக் கல்வி அலுவலரிடம் [DEO] மேலொப்பம் [COUNTER SIGNED] பெற வேண்டும்


*TET for working teachers Online Application portal is LIVE on 18.02.2026 at 5.00 a.m. via TRB’s official website successfully.*
APPLICATION LINK: CLICK HERE