SPECIAL TET/SGT/TNPSC தேர்வுக்கு தமிழ் பாடத்தினை படிப்பது எப்படி?

0
1251

6ஆம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை படிக்க வேண்டும்.. TET தேர்வு பாடத்திட்டத்தில் இலக்கண பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் நாமும் இலக்கண பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். இலக்கண விதிகளை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். பாட புத்தகத்தில் உள்ள வினாக்கள் மட்டுமல்லாது கூடுதலாக வினாக்கள் இலக்கண பகுதியிலிருந்து கேட்கும் பொழுது இலக்கண விதிகள் தெரிந்திருந்தால் மட்டுமே உங்களால் பதில் அளிக்க முடியும்.

முதலில் ஆறாம் வகுப்பு தமிழை எடுத்தால் இலக்கண பகுதியை முதலில் முடியுங்கள். பின்னர் செய்யுள் பகுதியை முடியுங்கள். அதன் பின்னர் உரைநடை பகுதியை படிக்கலாம். அதன் பின்னர் ஒவ்வொரு பாடத்திற்கும் பின்னால் வழங்கப்பட்டுள்ள மொழித்திறன் பயிற்சி வினாக்களை நன்கு படித்துக் கொள்ளுங்கள்.. பாடப்புத்தகத்தை முதலில் படியுங்கள். பின்னர் ரிவிசனுக்காக மட்டும் ஸ்டடி மெட்டீரியல்களை பயன்படுத்துங்கள். ஸ்டடி மெட்டீரியலை மட்டும் படித்தால் அது போதுமானதாக இருக்காது.

அனைவருக்கும் பகிருங்கள்

www.tamilmadal.com