TNPSC GROUP-02/GROUP-04 NEW SYLLABUS- TAMIL MODEL QUESTION
TNPSC GROUP-02 UPDATED SYLLABUS-DOWNLOAD
TNPSC GROUP-04 UPDATED SYLLABUS-DOWNLOAD
TNPSC GROUP-02, GROUP-04 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் (13-12-24) சற்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத் தமிழ் பிரிவில் வினாக்கள் எப்படி கேட்கப்படும் என்ற அடிப்படையில் NAKKEERAN TNPSC YOUTUBE ACADEMY மாதிரி வினாத்தாளை வழங்கி உள்ளது. மாதிரி வினாத்தாளை டவுன்லோட் செய்து பயன்பெறுங்கள்
TNPSC TAMIL MODEL QUESTION- DOWNLOAD
👍 பொதுத்தமிழ் பாடத்திட்டம் 90% குறைப்பு ✅
📚 அர்த்தமுள்ள பொதுத்தமிழ் பாடத்திட்டம்
✔️ 2024 வரை TNPSC மாணவர்கள் Group 4, Group 2,2A க்கான பொதுத்தமிழுக்கு தயார் செய்வதற்கு,
❌ 6 to 12 புதிய தமிழ் புத்தகம் ,
❌ 6 to 12 பழைய சமச்சீர் தமிழ் புத்தகம்,
❌ 2005 Black & White Edition தமிழ் புத்தகம்
என தேவையோ தேவை இல்லையோ அனைத்தையும் படித்து மனப்பாடம் செய்து மூளையை குப்பை தொட்டியாக மாற்றி தேர்வில் வாந்தி எடுக்க வேண்டிய நிலை இருந்தது.
✅ ஆனால் தற்போதைய மாற்றியமைக்கப்பட பொதுத்தமிழ் பாடத்திட்டத்தில் 85 கேள்விகள் மொழித்திறன் சார்ந்தும், 15 கேள்விகள் மட்டுமே (அலகு VII) இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் சார்ந்து கேட்கப்படும் வகையில் உள்ளது சிறப்பு.
✅ சொல்லபோனால் தமிழ் தகுதித்தேர்வில் உள்ள 37 பாடத்திட்ட தலைப்புகளே விரிவாக 85% பொதுத்தமிழ் பாடத்திட்டமாக உள்ளது.
✅ இந்த பாடத்திட்டம் பொதுத்தமிழ் மாணவர்களின் சுமையை குறைத்துள்ளது மட்டுமல்லாமல் தகுதியான மொழி ஆளுமை உள்ள மாணவர்களை தேர்வு செய்யும் வகையிலும் உள்ளது.👍
GENERAL TAMIL BLUEPRINT (OFFICIAL)
அலகு I: இலக்கணம் (25 கேள்விகள்
அலகு II: சொல்லகராதி (15 கேள்விகள் )
அலகு III: எழுதும் திறன் (15 கேள்விகள் )
அலகு IV: கலைச்சொற்கள் (10 கேள்விகள் )
அலகு V: வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்
(15 கேள்விகள் )
அலகு VI: எளிய மொழி பெயர்ப்பு (5 கேள்விகள் )
அலகு VII: இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் (15 கேள்விகள் )
(மேலும் அலகு VII-க்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை அடிப்படியாக கொண்டது என தெளிவாக குறிப்பிடப்பட்டள்ளது சிறப்பு)
✅ பல வருடங்களுக்கு பிறகு பொதுத்தமிழ் பாடத்திட்டம் அர்த்தமுள்ள வகையிலும் , செய்யப்போகும் அரசாங்க வேலைக்கு ஏற்ற வகையிலும் மாற்றப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பு.
✅ குரூப் 2,2A 2024 தேர்விற்கு பிறகு பொதுத்தமிழ் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பொதுத்தமிழ் பாடச்சுமையை 90% குறைத்து பாடத் திட்டத்தை மாற்றிய TNPSC க்கு வாழ்த்துக்கள் 🌺🌺🌺