MHC தேர்வு-2024 எப்படி இருக்கும்? தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும்?

0
1257

MHC தேர்வு எப்படி இருக்கும்? தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும்?

➡️மொத்தமாக 170 வினாக்கள் கேட்கப்படும்
➡️ 50 தமிழ் வினாக்களும் 120 பொது அறிவு (Science+social+Maths+current affairs+computer basic) வினாக்களும் கேட்கப்படும். (Driver exam pattern மாறுபடும்)

➡️05-05-2024 நடைபெற்ற தேர்வில் 32 கணித வினாக்களும், 11 ஆம் வகுப்பு பாடப்புத்தக கணினி அறிவியல் பகுதியில் இருந்து 10 வினாக்களும் கேட்கப்பட்டிருந்தன

➡️ ஆதலால் நாம் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான தமிழ், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை படிக்க வேண்டும். TNPSC MATHS தலைப்புகளில் உள்ள கணக்குகளை பார்க்க வேண்டும். கணினி அறிவியல் பாட புத்தக வினாக்களை படிக்க வேண்டும். . கடைசி ஆறு மாத நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும். இவைகள் அனைத்தையும் மூன்று மாதத்திற்குள் நீங்கள் படித்து முடித்தாக வேண்டும்

➡️ தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை நிச்சயமாக நமக்கு மூன்று மாதங்கள் வழங்கப்படும்.

➡️ வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக, நேரடி வினாக்களாகவே இருக்கும். ஆனால் மாவட்டந்தோறும் cut off வைக்கப்பட இருப்பதால் நீங்கள் 155+/170 எடுத்தாக வேண்டும். .

➡️ பாட புத்தகத்தை வரி வரியாக படித்து நிறைய மாதிரி வினாக்களை பார்த்து பல தேர்வுகளை எழுதிப் பார்த்தால் வெற்றி நிச்சயம்