சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இலக்கணம் முழுவதும்

0
5352

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இலக்கணம் முழுவதும்

🌝 சந்திரயான் இலவச ஆன்லைன் தேர்வுத் தொகுப்பு🌝
(TNPSC/TET/TNUSRB/TRB)
(தமிழ் தகுதி தேர்வு தொகுப்பு)

▪️6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்
▪️50 நாட்கள்-(செப்-14 முதல் நவ-30 வரை)
▪️100 தேர்வுகள்-3400 வினாக்கள்

👉தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும்.
👉 காலை 6.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு தேர்வு நடைபெறும்
👉தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் 8 மணி தேர்வு வாட்ஸ் அப் மற்றும் telegram குழுக்களில் பகிரப்படும்
👉இந்த தேர்வு தொகுப்பு நிறைவடைந்ததும் அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான தேர்வு தொகுப்பு தொடங்கப்படும்
👉 ஏற்கனவே நடைபெற்று வரும் எட்டு மணி தேர்வு தொகுப்பு வழக்கம் போல நடைபெற்று வரும்

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-8 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இலக்கணம் முழுவதும்

Welcome to your 8th Tamil Grammar second term

1. பெயர் சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறை………… என்பர்.

2. பெயர் சொல்லின் பொருளை வேறுபடுத்தும் முறையை வேற்றுமை என்பர். இதற்காக பெயர் சொல்லுடன் இணைக்கப்படும் அசைகளை …………. என்று கூறுவர்.

3. வேற்றுமையின் வகைகள் எத்தனை?

4. உருபுகள் இல்லாத வேற்றுமை எது?

5. வேற்றுமை உருபுகள் இடம்பெற வேண்டிய இடத்தில் அது இடம்பெறாமல் மறைந்திருந்து பொருள் தந்தால் அதனை………. என்பர்.

6. எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல் எழுவாய் தணிந்து நின்று இயல்பான பொருளை தருவது……… ஆகும்

7. காமராசர் பதவியை துறந்தார்.. இவ்வாக்கியம் எந்த வேற்றுமைக்கு எடுத்துக்காட்டாகும்?

8. முதல் வேற்றுமைக்கு மற்றொரு பெயர்………

9. ஆக்கல், அழித்தல், அடைதல், நீக்குதல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறு வகையான பொருளில் வரும் வேற்றுமை………

10. மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உறுப்புகள் எத்தனை?

11. கருவி பொருள், கருத்தா பொருள் ஆகிய இரண்டு வகையான பொருள்களில் வருவது……… எனப்படும்.

12. கருவி பொருள் முதற்கருவி துணைக்கருவி என மூன்று வகைப்படும்

13. கருத்தா பொருளின் வகைகள் எத்தனை?

14. உளியால் சிலை செய்தான் இவ்வாக்கியம் எதற்கு எடுத்துக்காட்டு?

15. சேக்கிழாரால் பெரியபுராணம் இயற்றப்பட்டது. இவ்வாக்கியம் எதற்கு எடுத்துக்காட்டாகும்?

16. கொடை, பகை, நட்பு, தகுதி போன்ற பல பொருள்களில் வரும் வேற்றுமை………

17. கூலிக்காக வேலை இவ்வாக்கியம் எதற்கு எடுத்துக்காட்டாகும்?

18. ஐந்தாம் வேற்றுமை உறுப்புகள் எத்தனை?

19. உரிமை பொருளில் வரும் வேற்றுமை……….

20. இல் என்னும் உருபு நீங்கல் பொருளில் வந்தால்………. எனப்படும்.

21. விளி வேற்றுமை என கூறப்படும் வேற்றுமை எது?

22. இரவின் கண் மழை பெய்தது. இவ்வாக்கியம் எதற்கெடுத்துக்காட்டாகும்?

23. இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ வினை பண்பு முதலியவற்றின் உறுப்புகளோ தொக்கி வருமானால்……… எனப்படும்.

24. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

25. ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது……… எனப்படும்.

26. வளர்தமிழ் என்னும் தொடர் எதற்கு எடுத்துக்காட்டாகும்?

27. பண்பு பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர் சொல்லுக்கும் இடையே ஆன ஆகிய என்னும் பண்புறுப்புகள் மறைந்து வருவது பண்புத்தொகை எனப்படும்.

28. சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க இடையில் ஆகிய என்னும் பண்புறுபு மறைந்து வருவது……… எனப்படும்.

29. ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் உம் என்னும் உருபு வெளிப்பட வருவது……..

30. மலர்விழி என்னும் தொடர் எதற்கு எடுத்துக்காட்டாகும்?

31. வேற்றுமை வினை பண்பு உவமை உம்மை ஆகிய தொகைநிலை தொடர்களுள் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது…….. எனப்படும்.

32. ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து அவற்றின் இடையில் எச்சொல்லும் இவ்வுருபும் மறையாமல் நின்று பொருள் உணர்த்தினால்………என்பர்.

33. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

34. எழுவாய் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக.

35. வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துவதால் இது………. எனப்படும்.

36. சாலவும் நன்று இவ்வாக்கியம் எதற்கு எடுத்துக்காட்டாகும்?

37. செம்மரம் என்னும் சொல்………… ஆகும்.

38. நிலைமொழி ஈரும், வருமொழி முதலும் இணைவதை……… என்கிறோம்.

39. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால்……….. எனப்படும்.

40. நிலை மொழியும் வரும் மொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது……… ஆகும்.

41. இரண்டு சொற்கள் இணையும்போது நிலை மொழியிலோ வரும் ஒளியிலோ அல்லது இரண்டிலும் மாற்றங்கள் நிகழும் ஆயின் அது……… எனப்படும்.

42. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்?

43. நிலைமொழியும் வருமொழியும் இணையும் போது புதிதாக ஓர் எழுத்து தோன்றுவது……….. எனப்படும்.

44. நிலை மொழியும் வரும் மொழியும் இணையும் போது ஓர் எழுத்து மறைவது………..

45. நிலை மொழியும் வருமொழியும் இணையும் போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது……….

46. இரண்டு சொற்கள் இணையும்போது ஒன்றுக்கு மேற்பட்ட விகாரங்கள் நிகழ்வதும் உண்டு.

47. மனமகழ்ச்சி இவ்வாக்கியம் எதற்கு எடுத்துக்காட்டாகும்?

48. மண்ணழகு எதற்கு எடுத்துக்காட்டாகும்?

49. நன்று நன்று நன்று இதில் பயின்று வந்துள்ள தொடர் எது?

50. தேடிப் பார்த்தான் இதில் பயின்று வந்துள்ள தொடர் எது?