சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இலக்கணம் முழுவதும்

0
5857

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இலக்கணம் முழுவதும்

🌝 சந்திரயான் இலவச ஆன்லைன் தேர்வுத் தொகுப்பு🌝
(TNPSC/TET/TNUSRB/TRB)
(தமிழ் தகுதி தேர்வு தொகுப்பு)

▪️6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்
▪️50 நாட்கள்-(செப்-14 முதல் நவ-30 வரை)
▪️100 தேர்வுகள்-3400 வினாக்கள்

👉தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும்.
👉 காலை 6.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு தேர்வு நடைபெறும்
👉தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் 8 மணி தேர்வு வாட்ஸ் அப் மற்றும் telegram குழுக்களில் பகிரப்படும்
👉இந்த தேர்வு தொகுப்பு நிறைவடைந்ததும் அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான தேர்வு தொகுப்பு தொடங்கப்படும்
👉 ஏற்கனவே நடைபெற்று வரும் எட்டு மணி தேர்வு தொகுப்பு வழக்கம் போல நடைபெற்று வரும்

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-10 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இலக்கணம் முழுவதும்

Welcome to your 10th std term 1 இலக்கணம்

Name
District
Whatsapp (Optional)
1. சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?

2. செய்யுளில் மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துக்கள் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்போது அதை குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான கூற்று எழுத்துக்கள் அவற்றின் பின்னால் வரும் இதனை………. என்கிறோம்.

3. உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

4. செய்யுள் இசை அளபெடையின் மற்றொரு பெயர்……….

5. செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய நெட் எழுத்துகள் அளபெடுத்தலை………… என்கிறோம்.

6. செய்யுளில் ஓசை குறியாத இடத்திலும் இனிய ஓசைக்காக குரல் நெடிலாகி அளபெடுப்பது…….. எனப்படும்.

7. செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்ச சொல்லாக திரிந்து அளபெடுப்பது………. எனப்படும்.

8. செய்யுளில் ஓசை குறையும் போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துக்கள் மற்றும் ஆயுத எழுத்தும் அளபெடுப்பது………. எனப்படும்.

9. எடுப்பதூஉம் என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?

10. ஓர் எழுத்து தனித்தோ பல எழுத்துக்கள் சேர்ந்து பொருள் தரும் வகையில் அமைவது………. ஆகும்.

11. மொழி எத்தனை வகைப்படும்?

12. ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது……… எனப்படும்.

13. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனி மொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது………

14. ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச் சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது……

15. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றை குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது………. எனப்படும்.

16. வினையடி உடன் விகுதி சேர்வதால் உருவாகும் தொழில் பெயர் வெகுதி பெற்ற தொழிற்பெயர் எனப்படும்.

17. நடவாமை, கொல்லாமை என்பது எதற்கு எடுத்துக்காட்டு?

18. விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்………… எனப்படும்.

19. கெடுதல் என்பது எவ்வாறு முதல் நிலை திரிந்த தொழில் பெயராக மாறும்?

20. ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையை கொண்டு முடிவது……… எனப்படும்.

21. தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வருவது……..

22. ஒரு தொடரில் சொற்களுக்கு இடையில் சொல்லோ உருபோ மறைந்து வராமல் வெளிப்படையாக பொருளை உணர்த்துவது…………

23. தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

24. குயில் கூவியது என்பது எதற்கு எடுத்துக்காட்டு?

25. காவேரி பாய்ந்தது எனும் தொடர் எதற்கு எடுத்துக்காட்டாகும்?

26. முற்றுப்பெறாத வினை பெயர் சொல்லைக் கொண்டு முடிவது………

27. பாடி மகிழ்ந்தனர் என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?

28. வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள்……….. எனப்படும்

29. இடைச்சொல் தொடருக்கு எடுத்துக்காட்டு…….

30. ஒரு சொல் இரண்டு அல்லது மூன்று முறை அடுக்கி வருவது………

31. ஒன்றுக்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடியும் கூட்டு நிலை பெயரெச்சங்களை இக்காலத்தில் பெருமளவில் பயன்படுத்துகிறோம்.

32. பாடினாள் கண்ணகி என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?

33. சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது………

34. பெயர் சொல்லோடு வினை சொல்லும் பெயர் சொல்லும் சேரும் தொடரின் இடையில் வேற்றுமை உருபுகளோ வினை பண்பு முதலியவற்றின் உறுப்புகளோ மறைந்து வந்து பொருள் தருவது………

35. தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

36. ஒரு தொடரில் வேற்றுமை உருபுகள் அவற்றுள் ஒன்று மறைந்து வந்து பொருள் உணர்த்துவது……….

37. ஒரு தொடரில் வேற்றுமை உருபு அதன் பொருளை விளக்கும் பயனும் சேர்ந்து மறைந்து வருவது……..

38. காலம் கரந்த பெயரெச்சம்…….. எனப்படும்.

39. காலம் காட்டும் இடைநிலையும் பெயரெச்ச விகுதியும் மறைந்து நிற்க வினைப் பகுதியை தொடர்ந்து ஒரு பெயர் வந்து ஒரு சொல்லை போல் நடப்பது…….

40. பெயர் சொல்லுக்கு இடையில் மை என்னும் பண்பு பகுதியும் ஆகிய ஆன என்னும் பண்பு உறுப்புகளும் மறைந்து வருவது………

41. இரு சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் மறைந்து வருவது………

42. வேற்றுமை வினை பண்பு உவமை ஆகிய தொகைநிலைத் தொடர்களில் உறுப்புகளும் அவை அல்லாத வேறு சொற்களும் மறைந்து நின்று பொருள் தருவது……….

43. சிறப்பு பெயர் உண்ணும் தொழில் பெயர் பின்னும் நின்று இடையில் ஆகிய என்னும் பண்பு உருபு தொக்கி வருவது………

44. இரு சொற்களுக்கு இடையில் உம் என்னும் இடைச்சொல் மறையாமல் வெளிப்படையாக வருவது……….

45. மலர்க்கை என்பது……..

46. வீசு தென்றல் என்பது எதற்கெடுத்துக்காட்டு?

47. சிவப்புச் சட்டை பேசினார் என்பது…………

48. தேர்ப்பாகன் என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?

49. உவமைக்கும் பொருளுக்கும் இடையில் உவம உருபு மறைந்து வருவது….

50. மதுரை சென்றார் என்பது எதற்கு எடுத்துக்காட்டாகும்?