

PGTRB-2023-24 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என்று TRB இன் வருடாந்திர கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் மற்றும் ஓய்வு பெற உள்ளவர்களின் விவரங்கள் உள்ளிட்ட தகவல்கள் பள்ளிக்கல்வித்துறையால் சேகரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் காலிப்பணியிடங்களின் விவரங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.