சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-7 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இலக்கணம் முழுவதும்

0
3776

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-7 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இலக்கணம் முழுவதும்

🌝 சந்திரயான் இலவச ஆன்லைன் தேர்வுத் தொகுப்பு🌝
(TNPSC/TET/TNUSRB/TRB)
(தமிழ் தகுதி தேர்வு தொகுப்பு)

▪️6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ்
▪️50 நாட்கள்-(செப்-14 முதல் நவ-30 வரை)
▪️100 தேர்வுகள்-3400 வினாக்கள்

👉தினமும் இரண்டு தேர்வுகள் நடைபெறும்.
👉 காலை 6.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு தேர்வு நடைபெறும்
👉தேர்வுக்கான லிங்க் நமது தமிழ் மடல் 8 மணி தேர்வு வாட்ஸ் அப் மற்றும் telegram குழுக்களில் பகிரப்படும்
👉இந்த தேர்வு தொகுப்பு நிறைவடைந்ததும் அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கான தேர்வு தொகுப்பு தொடங்கப்படும்
👉 ஏற்கனவே நடைபெற்று வரும் எட்டு மணி தேர்வு தொகுப்பு வழக்கம் போல நடைபெற்று வரும்

சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-7 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இலக்கணம் முழுவதும்

Welcome to your 7th term 2 இலக்கணம்

1. ஓர் எழுத்து தனித்து நின்று ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது………..

2. சொல் என்னும் பொருள் தரும் வேறு சொற்கள்…..

3. இலக்கணம் முறைப்படி சொற்கள் எத்தனை வகைப்படும்?

4. இலக்கிய வகையில் சொற்களை எத்தனை வகையாக பிரிக்கலாம்?

5. இலக்கணம் முறைப்படி அல்லாத சொல்வகை எது?

6. இலக்கிய முறைப்படி அல்லாத சொல் வகை எது?

7. எளிதில் பொருள் விளங்கும் வகையில் அமைந்த சொற்கள்……….. எனப்படும்.

8. இயர் சொல்லின் வகைகள் எத்தனை?

9. கற்றோருக்கு மட்டுமே விளங்குபவர்களாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவை ஆகவும் அமையும் சொற்கள்……….. எனப்படும்.

10. திரிசொல் எத்தனை வகைப்படும்?

11. கப்பல் என்று பொருள் தரும் வேறு சொற்கள்……..

12. பல பொருள் குறித்த ஒரு திரிசொல்லுக்கு எடுத்துக்காட்டு…..

13. ஒரு பொருள் குறித்த பல திரி சொல்லுக்கு எடுத்துக்காட்டு

14. வடமொழி தவிர பிற மொழிகளில் இருந்து வந்து தமிழில் இடம்பெறும் சொற்கள்………. எனப்படும்.

15. திசை சொல்லுக்கு எடுத்துக்காட்டு…….

16. வட மொழியில் இருந்து வந்து தமிழில் இடம் பெறும் சொற்கள்…………. எனப்படும்

17. வட சொற்களை எத்தனை வகையாகப் பிரிக்கலாம்?

18. வடமொழியில் இருப்பது போன்றே தமிழ் மொழியில் எழுதுவதை……….. என்பர்

19. வடமொழி எழுத்தில் உள்ளதை தமிழில் தமிழ் எழுத்துக்களால் மாற்றி எழுதுவதை………. என்பர்.

20. கமலம் என்ற சொல் இடம் பெறும் சொல்லின் வகை என்ன?

21. ஓர் எழுத்து பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓர் எழுத்து ஒரு மொழி என்பர்.

22. தமிழில் மொத்தம் 42 ஓர் எழுத்து ஒரு மொழி சொற்கள் உள்ளன என்று குறிப்பிட்டவர்?

23. இதில் எது ஓரெழுத்து ஒரு மொழி சொல்லில் குறில் எழுத்தாகும்?

24. மொத்தம் எத்தனை ஓரெழுத்து ஒரு மொழி சொல்லில் நெடில் எழுத்தாகும்?

25. சிறு சிறு உறுப்புகளாக பிரிக்கும் வகையில் அமையும் சொற்களை……… என்பர்.

26. பிரிக்கப்படும் உறுப்புகளை பகாபத உறுப்புகள் என குறிப்பிடுவர்.

27. பகுபதம் எத்தனை வகைப்படும்?

28. பெயர் பகுபதம் எத்தனை வகையாக பிரிக்கலாம்?

29. பகுபதமாக அமையும் வினைச்சொற்கள்………. எனப்படும்.

30. பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

31. பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையே இடம் பெறும் அசை சொல்……….. எனப்படும்.

32. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையை காட்டுவது……….

33. பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளை தருவது…………..

34. பகுதி சந்தி இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம்………… எனப்படும்.

35. பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை பால் எண் இடம் ஆகியவற்றையோ முற்று எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது………. எனப்படும்.

36. பகாபதம் எத்தனை வகைப்படு

37. அடி சொல் அல்லது வேர் சொல்லாக இருக்கும் …………பதம்??

38. எண், இடம், காலம், பால் ஆகியவற்றை காட்டாது……….

39. படர்க்கை இடத்தில் மட்டும் வருவது………..

40. தொழில் பெயர் எத்தனை வகைப்படும்?

41. வினைப் பகுதியுடன் தொழில் பெயர் வெகுதி சேர்ந்து வருவது………..

42. தொழில் பெயர் விகுதி அல்லாதது எது?

43. ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர். முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழில் பெயராக அமைவது………..

44. முதனிலை திரிந்த தொழில் பெயருக்கு எடுத்துக்காட்டு…….

45. வானில் இடி இடித்தது .. இவ்வாக்கியம் எடுத்துக்காட்டுவது……. தொழில் பெயராகும்.

46. விகுதி பெற்ற தொழில் பெயருக்கு எடுத்துக்காட்டு…….

47. தமிழில் உள்ள 42 ஓர் எழுத்து ஒரு மொழிகளின் எண்ணிக்கை இடம் பெற்றுள்ள நூல்……….

48. எழுதினான் என்பது……….

49. பகுபத உறுப்புகள் ஆறும் இடம்பெற்றுள்ள சொல்……..

50. நே என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள்………