1. வல்லின உகரங்களான ஆறும் சொல்லின் இறுதியில் வரும்போது ஒரு மாத்திரைக்கு பதிலாக………… அளவே ஒலிக்கும்.
2. தனக்குரிய ஓசையில் குறைந்து ஒலிக்கும் உகரம்………….
3. குற்றியலுகரம் பிரித்து எழுதுக
4. வல்லினம் அல்லாத உகரங்கள் எப்போதும்………… ஒலிக்கும்
5. ஓசை குறையாமல் ஒரு மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதை………. என்பர்.
6. குற்றியலுகரத்தின் வகைகள்………
7. ஈரெழுத்து சொற்களாக மட்டும் அமையும் குற்றியலுகரம்……………
8. அரசு என்னும் சொல் எவ்வகை குற்றியலுகரமாகும்?
9. தனி நெடிலைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம்…………. குற்றியலுகரம் எனப்படும்.
10. பாட்டு என்னும் சொல் எவ்வகை குற்றியலுகர எடுத்துக்காட்டாகும்?
11. இடையினம் மெய் எழுத்துக்களை தொடர்ந்து வரும் குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரம் எனப்படும்.
12. பண்பு என்னும் சொல் எவ்வகை குற்றியலுகர எடுத்துக்காட்டாகும்?
13. ஆறு என்னும் சொல் எவ்வகை குற்றியலுகர எடுத்துக்காட்டாகும்?
14. மூழ்கு என்னும் சொல் எவ்வகை குற்றியலுகர தொடருக்கு எடுத்துக்காட்டாகும்?
15. வ் இன்னும் எழுத்தை தொடர்ந்து வரும் குற்றியலுகர சொற்கள் இல்லை.
16. டு என்னும் எழுத்தில் இறுதியாக அமையும் இடைத்தொடர்க் குற்றியலுகர சொற்கள் இல்லை.
17. தன் ஒரு மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம்……….. எனப்படும்.
18. குறுமை+இயல்+இகரம்= ………..
19. குற்றியலிகரம் எத்தனை இடங்களில் மட்டும் வரும்?
20. தற்பொழுது உரைநடை வழக்கில் இல்லாததும் இலக்கியங்களில் மட்டுமே உள்ளதும்………… ஆகும்.
21. குறுக்கங்கள் எத்தனை வகைப்படும்?
22. சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவை விட குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துக்களை………… என்கிறோம்.
23. ஐகார எழுத்தின் மாத்திரை அளவு………
24. சில இடங்களில் தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் ஐகாரம்…………. எனப்படும்.
25. ஐகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்போது ஒலிக்கும் மாத்திரை அளவு?
26. ஐகாரம் சொல்லின் முதலில் வரும் பொழுது ஒலிக்கும் மாத்திரை அளவு என்ன?
27. ஔகாரம் சொல்லின் இடையிலும் இறுதியிலும் வரும்.
28. ஔகாரம் சொல்லின் முதலில் வரும் பொழுது தனக்குரிய இரண்டு மாத்திரை அளவில் இருந்து எவ்வளவு மாத்திரை அளவு குறைந்து ஒலிக்கும்?
29. மகரக் குறுக்கத்தின் மாத்திரை அளவு……….
30. மகர மெய்யானது தனக்குரிய அரை மாத்திரை அளவில் இருந்து குறைந்து………. மாத்திரை அளவில் ஒலிக்கிறது.
31. போலும் என்னும் சொல்லை போன்ம் என்றும், மருளும் என்னும் சொல்லை மருண்ம் என்றும் செய்யுளில் ஓசை சீர்மைக்காக பயன்படுத்தினர்.
32. தனது முழு மாத்திரை அளவான அரை மாத்திரை அளவில் ஒலிக்கக்கூடிய ஆயுத குறுக்க சொல் எது?
33. சில இடங்களில் ஆயுத குறுக்கம் குறைந்து ஒழிக்க கூடிய மாத்திரை அளவு என்ன?
34. வழக்கு எத்தனை வகைப்படும்?
35. இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
36. ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது………….
37. இலக்கண நெறி மாறாமல் முறையாக அமைந்த சொல்…………. ஆகும்.
38. இலக்கணம் முறைப்படி அமையாவிடினும், இலக்கணம் உடையவை போலவே ஏற்றுக் கொள்ளப்படும் சொற்கள்…………. எனப்படும்.
39. பெரும்பாலும் சொற்களின் முன் பின் பகுதிகள் இடம் மாறி வருவதை குறிப்பது…………
40. முன்பின்னாக தொக்க போலி எனவும் குறிப்பிடுவது இலக்கண போலியாகும்.
41. இலக்கண நெறியில் இருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொற்கள்………
42. தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்?
43. ஏதேனும் ஒரு காரணத்தினால் பிறரிடம் சொல்ல தகுதியற்ற சொற்களை தகுதியான வேற சொற்களால் குறிப்பிடுவது………. எனப்படும்
44. பிறரிடம் வெளிப்படையாக சொல்லத் தகாத சொற்களை தகுதியுடைய வேறு சொற்களால் கூறுவது………….
45. மங்கலம் இல்லாத சொற்களை மங்கலமான வேறு சொற்களால் குறிப்பது……….
46. பலர் கூடி இருக்கும் இடத்தில் சிலர் மட்டும் தமக்குள் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்பினால் மற்றவர்கள் புரிந்து கொள்ள இயலாத வகையில் சொற்களைப் பயன்படுத்துவது………..
47. பொன்னை பறி எனல் …… இவற்றைப் பயன்படுத்துபவர் யார்?
48. போலி எத்தனை வகைப்படும்?
49. ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துக்களுக்கு பதிலாக எழுத்துக்கள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள் மாறாமல் இருப்பது………
50. போலி என்னும் சொல் போல இருத்தல் என்பதிலிருந்து தோன்றியது.