TNPSC தான் வாழ்க்கை என்று படிப்பவர்களுக்கு சின்ன அறிவுரை

0
572

#TNPSC #தான் #வாழ்க்கை #என்று #படிப்பவர்களுக்கு #சின்ன #அறிவுரை

முதலில் எல்லோரும் எந்த தேர்விற்காக படித்து கொண்டு இருக்கிறோம் அந்த தேர்வு பாடத்திட்டம் என்ன (Syllabus) நன்றாக தெரிந்திருக்க வேண்டும் ஒரு முறைக்கு ஐந்து முறையாவது (Syllabus) நன்றாக படித்து பார்க்க வேண்டும் 2) பள்ளி பாடப் புத்தகத்தை மட்டுமே முதலில் படிக்க வேண்டும் (TNPSC) தேர்வில் படித்து வெற்றி பெற்றவர்கள் அனைவருமே பள்ளி புத்தகத்தை படித்தவர்கள் தான்..💯 தயவு செய்து மார்கெட் புத்தகம் வாங்கி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்3) தினமும் ஒரு குறைந்தபட்சம் மூன்று மணிநேரம் ஒதுக்கி படித்தால் போதும் தேர்வில் வெற்றி பெறலாம்4) படிக்கும் போது ஒரு சில பேருக்கு தூக்கம் சோர்வு வரும் அது மனித இயல்பு அப்போது ஒரு பத்து நிமிடம் உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள் பாட்டு கேளுங்கள் மனது அமைதி உற்சாகம் வரும்5) மனித மனம் குரங்கு மாதிரி மாறிக்கொண்டே இருக்கும் திட்டம் போட்டு படியுங்கள் இந்த நாளில் நம் என்ன படிக்க வேண்டும் அந்த நாட்கள் வேலைகளை அன்றே செய்து முடித்து விட்டா நீங்கள் தான் வெற்றியாளர்6) உறவினர்கள் நண்பர்கள் தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் சில நேரம் நம் பெற்றோர்கள் கூட புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள் எத்தனை மாதங்கள் வருடம் படித்து கொண்டு இருப்ப போய் வேர் வேலை பார் அப்படி இப்படி பேசுவார்கள் கஷ்டம் அரசு வேலை கிடைக்க உன் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று எதையும் காதில் வாங்காமல் உங்கள் கடின உழைப்பு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்7) நீங்கள் வெற்றி பெற்றால் எப்படி எல்லாம் முன்னாடி பேசுன அனைவரும் ஒரே வார்த்தை தான் கூறுவார்கள் எனக்கு முன்னாடி தெரியும் நீ வெற்றி பெறுவது எனக்கு தெரியும் என்று அது தான் மனித குணம் 8) எத்தனை கோச்சிங் சென்டர் எவ்வளவு பேர் வந்து சொல்லி தந்தாலும் நீங்கள் நன்றாக படித்தால் மட்டுமே அரசு வேலை கிடைக்கும் 9) தயவு செய்து அரசு வேலைக்காக யாரிடமும் பணம் தந்து ஏமாற வேண்டாம் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு வேலை கிடைக்கும் 💯 உண்மை இதை படிக்கின்ற மாணவ மாணவிகள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்10) இருக்கின்ற காலம் நேரம் மனதில் வைத்து கொண்டு நன்றாக படியுங்கள் கண்டிப்பாக கடின உழைப்பு எப்போதும் தோல்வி ஆனது என்று சரித்திரம் இல்லை அதை சரியாக பயன்படுத்தியவர்கள் மட்டுமே..👍💯2023 ஆம் ஆண்டு வருகின்ற அனைத்து தேர்வுகள் வெற்றி பெற்று உங்களுக்கு பிடித்த துறை தேர்ந்தெடுத்து உண்மையாகவும் நேர்மையாகவும் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் இந்த 2023 to 2024 ஆண்டு இனிய ஆண்டாக அமையட்டும்..