ஏப்ரல்.4:இன்று  மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) நினைவு தினம்

0
331

ஏப்ரல்.4:இன்று  மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) நினைவு தினம்!👉1929-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் பிறந்த அந்தக் குழந்தைக்கு ஆரம்பத்தில் வைக்கப்பட்ட பெயர் மைக்கேல் லூதர் கிங். 👉புராட்டெஸ்டாண்டு புரட்சியாளர் மார்ட்டின் லூதர் கிங்கின் மேல் கொண்ட பற்றின் காரணமாக அந்தக் குழந்தையின் தந்தை மார்ட்டின் லூதர் கிங் என்ற பெயரைப் பிற்பாடு தனது பிள்ளைக்கு வைத்தார். 👉முன்னவருடன் வேறுபடுத்தி அடையாளம் காண்பதற்காக மார்ட்டின் லூதர் கிங் (ஜூனியர்) என்று பின்னாளில் அழைக்கப்பட்டது அந்தக் குழந்தை.👉தனது தந்தை பாதிரியாராக இருந்த திருச்சபையிலேயே கிங்கும் 1947-ல் சேர்ந்தார். 👉லூதர் கிங் சமூகவியலில் இளங்கலை பட்டம் பெற்று பின் சமயக்கல்வியை முடித்து அலபாமாவில் உள்ள டெக்ஸ்டர் அவென்யூ பாப்டிஸ்ட் சர்ச்சின் போதகர் ஆனார். 👉1955ஆம் ஆண்டு பாஸ்ட்டன் கல்லூரியில் சந்தித்த கோரட்டா ஸ்காட்டை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்👉அமெரிக்கா 20 ஆம் நூற்றாண்டில் வளர்ந்த நாடாக தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டுவந்தாலும் நிற வேற்றுமை என்ற கொடிய நோய் அமெரிக்காவை தாக்கியிருந்தது. 👉1955ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி ரோசா பார்க் என்ற கருப்பின பெண்மணி பேருந்தில் பயணம் செய்தபொழுது, பேருந்தில் ஏறிய வெள்ளை இனத்தவர்கள் அமர இடமில்லை என்று ரோசா பார்க்கை பேருந்திலிருந்து கீழே இறக்கிவிட்டனர். 👉அது வரை அமைதியாக இருந்த கருப்பினத்தவர்கள், இந்த நிகழ்வை எதிர்க்கும் வகையில் சுமார் ஐம்பதாயிரம் பேர் ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை கட்டுப்படுத்த துப்பாக்கிச்சூடு நடந்தது.👉தனது இனமக்களின் மீது இவ்வாறு நடத்தப்படும் தாக்குதலுக்காகவும், நிற வேறுபாடின்றி சம உரிமைக்காக பல போராட்டங்களை அமைதியாகவும், அறவழியிலும் நடத்தினார் லூதர் கிங். 👉இவர் அறவழிப் போராட்டங்களை நடத்தியதற்கு காரணம் மகாத்மா காந்தியின் மீதும் அவரின் அறப்போராட்டத்தின் மீதும் மிகுந்த பற்று வைத்திருந்ததே. 👉காந்தியடிகளின் அறப்போராட்டத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக 1959 ஆம் ஆண்டு இந்தியா வந்து காந்தியடிகள் பழகிய தலைவர்களுடன் அவரைப் பற்றி தெரிந்து கொண்டார். அதற்காக ஒரு மாத காலம் இந்தியாவிலிருந்தார் லூதர் கிங். 👉கருப்பின மக்களின் அகிம்சைப் போராட்டத்தில் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா போன்ற நாயகர்கள் கிடைத்தது மிகப் பெரிய உத்வேகமாக அந்த மக்களுக்கு அமைந்தது.👉1963-ல் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கருப்பின மக்கள் வாஷிங்டனில் அணிவகுத்தபோது கிங் ஆற்றிய உரையைத் தொலைக்காட்சியில் பார்த்த கோடிக் கணக்கான அமெரிக்கர்கள் – வெள்ளையர் உட்பட- மிகவும் நெகிழ்ந்துபோனார்கள்.👉உலகையே கட்டிப்போட்ட அந்த உரையின் சில பகுதிகள்: எனக்கொரு கனவு இருக்கிறது… எல்லா மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டார்கள் என்ற தனது நம்பிக்கைக்கு ஏற்ப ஒருநாள் இந்த தேசம் எழுச்சி பெறும், அந்த நம்பிக்கையின்படி இந்த தேசம் செயலாற்றும் என்று எனக்கொரு கனவு இருக்கிறது. … எனக்கொரு கனவு இருக்கிறது… எனது நான்கு குட்டிக் குழந்தைகளும் தோல் நிறத்தால் அல்லாமல் அவர்களுடைய குணத்தால் மட்டுமே மதிப்பிடப்படக்கூடிய ஒரு தேசத்தில் வாழ்வார்கள் என்று எனக்கொரு கனவு இருக்கிறது. … எனக்கொரு கனவு இருக்கிறது… அலபாமா மாகாணத் தின் கருப்பினச் சிறுவர், சிறுமிகள் வெள்ளையினச் சிறுவர் சிறுமியரோடு சகோதர சகோதரியராகக் கைகோத்துக் கொள்வார்கள் என்று எனக்கொரு கனவு இருக்கிறது. … இந்த நம்பிக்கையோடு, நமது தேசத்தில் அபஸ்வரமாக ஒலிக்கும் ஓசையையெல்லாம் சகோதரத்துவத்தின் இனிய சிம்ஃபொனியாக நம்மால் மாற்ற முடியும். இந்த நம்பிக்கை யோடு, ஒருநாள் நாமெல்லாம் சுதந்திரமானவர்களாக ஆவோம் என்ற உணர்வோடு, நாமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து உழைக்கவும், ஒன்றாகப் பிரார்த்திக்கவும், ஒன்றாகப் போராடவும், ஒன்றாகச் சிறை செல்லவும், சுதந் திரத்துக்காக ஒன்றாகத் தோள்கொடுக்கவும் முடியும்.”👉1964ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 👉லூதர் கிங்கின் தொடர் போராட்டத்தின் காரணமாக 1965 ஆம் ஆண்டு கருப்பினத்தவருக்கு அமெரிக்க அரசு ஓட்டுரிமை வழங்கியது. 👉வெள்ளை இனத்தவர்களும், கருப்பினத்தவர்களும் சமம் என்ற மனித உரிமை சட்டத்தை பிறப்பித்தது. 👉டென்னிசியில் நடைபெறவிருந்த துப்புரவு தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள 1968ஆம் ஆண்டு ஏப்ரல் 3 மாலை அங்கு சென்று ஹோட்டலில் தங்கியிருந்து, மறுநாள் ஹோட்டலின் பால் கனியில் நின்று கொண்டிருந்தபொழுது வெள்ளை இன தீவிரவாதி ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். 👉1968-ம் ஆண்டு, ஏப்ரல் 4-ம் தேதி அவர் சுட்டுக் கொல்லப் பட்டார்.👉காந்தியின் வழியில் அகிம்சை வழியில் போராடிய  லூதர் கிங்கிற்கும், காந்தியைப் போலவே துப்பாக்கியினால் சுட்டுக்கொல்லப்பட்டார். 👉இதனால் லூதர் கிங்கை கருப்பு காந்தி என அழைத்தனர்.