ஏப்ரல் 1:இன்று முட்டாள்கள் தினம்!

0
354

ஏப்ரல் 1:
இன்று முட்டாள்கள் தினம்!

👉1500-களில் ஐரோப்பியர்கள் கடைப்பிடித்த ஒரு பழக்கமாக ஏப்ரல் 1 கூறப்படுகிறது.

👉அப்போது, அந்த நாளின் பெயர் ஏப்ரல் மீன்கள் தினம்.

👉ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் ஃபிரான்ஸ்ஸில் உள்ள ஆறுகளிலும் நீரோடைகளிலும் நிறைய மீன்கள் இருக்கும்.

👉அப்போது மீன்பிடிப்பது மிகவும் சுலபம்.

👉ஆகையால் மீன்கள் ஏமாறும் தினமாக ஏப்ரல் 1 கருதப்பட்டது.

👉காலப்போக்கில் மனிதர்களை ஏமாற்றும் தினமாக அது மாற்றம் அடைந்து, ஏப்ரல் 1-ம் தேதி, முட்டாள்கள் தினம் என ஆனது.

👉புராதன வரலாற்றில் ரோமானிய நாட்காட்டியின்படி ஏப்ரல் 1-ம் தேதிதான் வசந்தம் ஆரம்பிக்கும் பொன்னாளாகும்.

👉1562-ம் ஆண்டில் போப் கிரிகோரி புதிய ஆண்டுத் தொடக்கத்தை நடைமுறைப்படுத்தும்படி அறிவித்தார்.

👉ஆண்டுத் தொடக்க நாளாக ஜனவரி 1-ம் தேதியை அறிமுகம் செய்து வைத்தார்.

👉போப்பின் இந்த அறிவிப்பை நம்பாதவர்கள் ஏப்ரல் 1-ம் தேதியையே புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடினர்.

👉இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை.

👉பிரான்ஸ் 1852-ம் ஆண்டிலும் ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டன.

👉புதிய வழக்கத்தை ஏற்றுக்கொண்டு ஜனவரி முதலாம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள், இந்த பழைய வழக்கத்தைப் பேணி ஏப்ரல் மாதம் முதல் தேதியில் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைத்தார்கள்.

👉1582-ம் ஆண்டுக்கு முன்னரேயே 1508-ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது.

👉அதேபோல் டச்சு மொழியிலும் 1539-ம் ஆண்டுக் காலப் பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

👉1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.

👉ஜனவரி மாதம் 1-ம் தேதியைப் புத்தாண்டாக ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள் அல்லது மறந்தவர்களுக்கு முட்டாள்தனமான பரிசுகளை அனுப்பினர்.

👉இதுவே  பிரான்ஸிலிருந்து இங்கிலாந்துக்கும் அங்கிருந்து அமெரிக்காவுக்கும் ‘ஏப்ரல் பூல்’ விரிந்து பரவி இருக்கிறது.

👉1986-ல் ப்ரெட் வால்டன் இயக்கிய, ‘ஏப்ரல் பூல்ஸ் டே’ திரைப்படம் மிகப் பிரபலமானது.