ஏப்ரல்.1:இன்று ஒடிசா தினம்!

0
272

ஏப்ரல்.1:
இன்று ஒடிசா தினம்!

👉இன்று உத்கலா தினம் என்று அழைக்கப்படும் ஒடிசா மாநிலம் உருவான நாள்.

👉ஒடிசா (Odisha, பழைய பெயர் ஒரிசா (Orissa)), இந்தியாவின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும்.

👉1895-ம் ஆண்டு அப்போதைய மத்திய மாகாணத்தில் இருந்த சம்பல்பூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி, அரசு அலுவலகப் பணிகளில் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டது.

👉இந்தித் திணிப்பு நடவடிக்கையை எதிர்த்து ஒரியாவை தாய்மொழியாகக் கொண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

👉ஒரிய மக்களின் தாய்மொழிப் பாதுகாப்பு போராட்டம் காலப்போக்கில் தனிமாநிலக் கோரிக்கை போராட்டமாக உருவெடுத்தது.

👉இதனைத்தொடர்ந்து, பீகார், வங்கம் என பல்வேறு மாகாணங்களில் பிரிந்துகிடந்த ஒரிய மக்கள் ஒரணியில் ஒன்றுதிரண்டனர்.

👉1902-ம் தனிமாநில கோரிக்கையை வலியுறுத்தி பாலசோர் மன்னர், ஆங்கிலேய அதிகாரி கர்சன் பிரபுவிடம் மனு கொடுத்தார்.

👉ஒரியாவின் தந்தை, ஒரியாவின் பெருமை (உத்கல் கவுரப்) என்றழைக்கப்படும் மதுசூதன் தாஸ் தனிமாநிலப் போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கினார்.

👉இதன் விளைவாக, 1903-ம் ஆண்டு “உத்கல் சம்மிலானி” என்ற அமைப்பைத் தொடங்கி, மயூர்மஞ்ச் மன்னர் ராமச்சந்திர பஞ்சதேவ் தலைமையில் கூட்டத்தை நடத்தினார்.

👉1912-ம் ஆண்டு வங்கத்திலிருந்து பிரிக்கப்பட்டு பீகார்-ஒரிசா மாகாணம் உருவாக்கப்பட்டது.

👉தனிமாநிலத்தில் உறுதியாக இருந்த ஒரிய மக்கள் போராட்டத்தை கைவிடவில்லை.

👉1927-ம் ஆண்டு மொழிப்போராளி நீல கந்ததாஸ், சைமன் கமிஷனிடமும் மனு அளித்தார்.

👉தொடர்ந்து, 1930-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாட்டில், பீகார்-ஒரிசா மாகாணம் சார்பில் கலந்துகொண்ட, பார்லகேமுண்டி மன்னர் கிருஷ்ண சந்திர கஜபதியும் தனிமாநிலக்கோரிக்கையை வலியுறுத்தினார்.

👉இப்படி மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தாலும், மன்னர்களின் முன்னெடுப்புகளாலும், 1931-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கம் “ஓடோனல் எல்லை வரையறை ஆணையத்தை”(O’Donnell Boundary Commission) அமைத்தது.

👉1935-ம் ஆண்டு இந்திய நிர்வாக சட்டத்தின்கீழ், பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே ஒரிசா தனிமாநிலமாக பரிணமித்தது.

👉1936-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் நாள் இந்திய வரலாற்றிலேயே சுதந்திரத்துக்கு முன்பு உருவான முதல் மொழிவாரி மாநிலமாக “ஒரிசா” அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.